Automobile Tamilan

ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மாடல்களுக்கு ரூ.10,000 விலை தள்ளுபடியை அறிவித்த டிரையம்ப்

triumph-rs-10000-discount

50க்கு மேற்பட்ட நாடுகளில் 50,000க்கு அதிகமான டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக்குகளின் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் வகையில் ரூ.10,000 வரை சிறப்பு தள்ளுபடியை ஜூலை 31,2024 வரை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 2023ல் விற்பனைக்கு வந்த பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியில் உருவான முதல் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X என இரு மாடல்களும் இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட மலேசியா என 50க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 50,000 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இரு மாடலிலும் TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

ரூ.10,000 வரை விலை சலுகை அறிவித்துள்ளதால் ஸ்பீடு 400 விலை ரூ.2.24 லட்சத்துக்கும், ஸ்கிராம்பளர் 400x மாடல் ரூ.2.54 லட்சத்துக்கும் கிடைக்க உள்ளதாக டிரையம்ப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் திரஸ்டன் 400 வெளியாகலாம்

Exit mobile version