டிரையம்ப் மோட்டார்சைக்கிள் பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ள ஸ்பீட் 400 பைக்கின் முக்கிய கேள்விகளுக்கு அனைத்து பதில்களும் ஒரே தொகுப்பாக அறிந்து கொள்ளலாம்.
பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியில் உருவான 400சிசி என்ஜின் பெற்ற ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் ஸ்பீடு மாடல் மிக விரைவாக 10,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.
Faq டிரையம்ப் ஸ்பீட் 400
டிரையம்ப் ஸ்பீடு 400 என்ஜின் விபரம் ?
TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் டாப் ஸ்பீடு எவ்வளவு ?
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் டாப் ஸ்பீடு 160Kmph ஆகும்.
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் , ஸ்பீட் 400 பைக் மைலேஜ் 30kmpl வரை வெளிப்படுத்தலாம்.
டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் கெர்ப் எடை ?
ஸ்பீடு 400 பைக்கின் கெர்ப் எடை 170 கிலோ கிராம் கொண்டுள்ளது.
ஸ்பீட் 400 பைக்கின் இருக்கை உயரம் எவ்வளவு ?
டிரையம்ப் ஸ்பீட் 400 மாடலின் இருக்கை உயரம் 790 mm ஆகும்.
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கில் ஏபிஎஸ் உள்ளதா ?
ஸ்பீட் 400 நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் உடன் முன்பக்கத்தில் 300 mm நிலையான டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
டிரையம்ப் ஸ்பீட் 400 சஸ்பென்ஷன் விபரம்
ஸ்பீட் 400 மாடலில் 43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 140 மிமீ பயணத்தை வழங்குகிறது. பின்பக்கத்தில்130 மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் உள்ளது.
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள், ஹோண்டா சிபி 350, ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
டிரையம்ப் ஸ்பீடு 400 டயர் மற்றும் வீல் அளவு ?
110/70 R17 முன்பக்கத்தில் மற்றும் பின்பக்கத்தில் 150/60 R17 ஆக உள்ளது.
டிரையம்ப் ஸ்பீட் 400 உள்ள நிறங்கள் எத்தனை ?
சிவப்பு உடன் கருப்பு, நீலம் நிறத்துடன் கிரே மற்றும் கருப்புடன் கிரே என மூன்று நிறங்கள் உள்ளது.
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 2,77,845
ஸ்பீட் 400 எரிபொருள் கொள்ளளவு எவ்வளவு ?
13 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் வழங்கப்பட்டுள்ளது.