முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுக சலுகையாக டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கிற்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜுன் 27, 2023 முதல் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
ரூ.2.23 லட்சம் விலையில் கிடைக்கின்ற டிரையம்ப் ஸ்பீட் 400 ரோட்ஸ்டெர் பைக்கில் TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
Triumph Speed 400
43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 140 மிமீ பயணத்தை வழங்குகிறது. பின்பக்கத்தில்130மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரேக்கிங் பொறுத்தவரை, ட்ரையம்ப் ஸ்பீட் 400 நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் பொருத்தப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 300 mm நிலையான டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
முதல் 10,000 முன்பதிவு கடந்த நிலையில் இனி டிரையம்ப் ஸ்பீட் 400 விலை ரூ.2.33 லட்சம் ஆகும்.