ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டிரையம்ப் ஸ்பீடு 400 அறிமுகத்தின் பொழுது அறிவிக்கப்பட்ட ரூ.10,000 வரை தள்ளுபடி டிசம்பர் 31, 2023 வரை மட்டுமே கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2024 முதல் ஸ்பீடு 400 மாடல் விலை ரூ. 2.33 லட்சம் ஆக கிடைக்க உள்ளது.
Triumph Speed 400
பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியில் உருவான முதல் பைக் மாடலான ஸ்பீட் 400யில் TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் மைலேஜ் 30 Kmpl வழங்குகின்றது.
பிரேக்கிங் அமைப்பினை பொறுத்தவரை, நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் பொருத்தப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 300 mm நிலையான டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. இந்த பைக்கின் இரண்டு முனைகளிலும் 17 இன்ச் டயர் பொருத்தப்பட்டு டயரை பெற்றுள்ளது.
இந்த பைக்கிற்கு போட்டியாக ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள், ஹோண்டா சிபி 350, ஆகியவற்றை
ஸ்பீடு 400 மாடல் அறிமுகத்தை தொடர்ந்து ட்ரையம்ப் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் 50 ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது. டீலர்ஷிப் விரிவாக்கம் ஏப்ரல் 2024க்குள் 80 நகரங்களை அடைய டிரையம்ப் திட்டமிட்டுள்ளது. 20,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 X பைக் மூலம் டிரையம்ப் பெற்றுள்ளது.