Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்

by automobiletamilan
August 2, 2023
in Harley-Davidson
0
SHARES
0
VIEWS
ShareRetweet

harley-davidson x440 bike

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள புதிய X440 ரோட்ஸ்டெர் மோட்டார்சைக்கிள் மாடல் என்ஜின் விபரம், நுட்பவிபரங்கள், நிறங்கள், வசதிகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன-ரோடு விலை பட்டியல் என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Table of Contents

  • Harley-Davidson X440
  • 2023 Harley-Davidson X440 On-road Price in Tamil Nadu
        • Harley-Davidson X440
      • Pros
      • Cons

Harley-Davidson X440

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் இணைந்து தயாரித்துள்ள முதல் மோட்டார்சைக்கிள் எக்ஸ் 440 பைக்கில் அதிகபட்சமாக 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்தும், 440சிசி ஒற்றை  லாங் ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6000 rpm-ல் 27 bhp பவர் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X440 பைக் மைலேஜ் லிட்டருக்கு 35 கிமீ வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Denim, Vivid, மற்றும் S என பொதுவாக மூன்று வேரியண்டும் பெற்று சிறிய அளவிலான மாறுதல்கள் கொண்டதாக உள்ளது. பொதுவாக எல்இடி ஹெட்லைட், யூஎஸ்பி போர்ட், டூயல் சேனல் ஏபிஎஸ், ஆட்டோ ஹெட்லேம்ப் ஒளிரும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஹார்லி எக்ஸ் 440 மாடலின் பரிமாணங்கள்  2168 mm நீளம், வீல்பேஸ் 1418 mm மற்றும் இருக்கை உயரம் 805 mm மற்றும் 178 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று 181 கிலோ எடை கொண்டுள்ளது. முன்புறத்தில் 100/90 X 18 டயர் மற்றும் பின்புறத்தில் 140/70 X 17 டயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் 18 அங்குல சக்கரம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. 320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 mm டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.

மூன்று வேரியண்டும் ஹீரோவின் செயலி மூலம் வேலை செய்யும் அழைப்பு, இசை மற்றும் நேவிகேஷன் கட்டுப்பாட்டுடன் புளூடூத் இணைப்பையும் பெறுகின்றன

மஸ்டர்டு டெனிம் என்ற ஒற்றை நிறத்தை கொண்டுள்ள இந்த வேரியண்டில் ஸ்போக்டு வீல் மற்றும் ட்யூப் டயர் கொண்டதாக வந்துள்ளது

டூயல் டோன் பெற்ற டார்க் சில்வர், சிவப்பு நிறம் ஆகியவற்றில் கிடைக்கின்ற  x440 விவிட் ஸ்போக்டூ வீலுக்கு பதிலாக அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்ட் வசதி பெற்ற டாப் எக்ஸ் 440 வேரியண்டில் வேரியண்டில் டைமண்ட் கட் அலாய் வீல், பிராண்ஸ்டு என்ஜின், மற்ற வசதிகளாக மூலம் 3.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே,  நிகழ் நேரத்தில் எரிபொருள் இருப்பு, ரேஞ்ச் டிஸ்ப்ளே, கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ஸ்பீடோமீட்டர், டர்ன் இன்டிகேஷன், ஹை பீம் இன்டிகேட்டர், ஏபிஎஸ் அலர்ட், சைட் ஸ்டாண்ட் அலர்ட், சர்வீஸ் இன்டிகேஷன், குறைந்த எரிபொருள் எச்சரிக்கை, நியூட்ரல் பொசிஷன் இன்டிகேட்டர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

இ-சிம் உதவியுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், அழைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் நிராகரிப்பது, ஸ்மார்ட்போன் பேட்டரி நிலை, தவறவிட்ட அழைப்பு எச்சரிக்கை, செய்தி எச்சரிக்கை மற்றும் நெட்வொர்க் ஸ்டெர்ன்த் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த சேவைக்கான சந்தா முதல் வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.

Harley-Davidson X440 Prices (ex-showroom)

  • X440 Denim ₹. 2,39,500 லட்சம்
  • X440 Vivid ₹. 2,59,500 லட்சம்
  • X440 S ₹. 2,79,500 லட்சம்

(ex-showroom)

இந்த பைக்கிற்கு முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படுகின்றது. அக்டோபர் 2023 முதல் விநியோகம் தொடங்குகிறது

harley-davidson x440-variants explained

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகைஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke79.6 mm x 88.4 mm
Displacement (cc)440 cc
Compression ratio9.5:1
அதிகபட்ச பவர்27 hp at 6000 rpm
அதிகபட்ச டார்க்38 Nm  at 4000 rpm
எரிபொருள் அமைப்புFuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்ட்ரெல்லிஸ் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன்6 ஸ்பீடு
கிளட்ச்வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்KYB 43mm USD ஃபோர்க்
பின்பக்கம் 7 ஸ்டெப் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம்டிஸ்க் 320 mm
பின்புறம்டிஸ்க் 240 mm (Dual ABS)
வீல் & டயர்
சக்கர வகைஸ்போக்/அலாய்
முன்புற டயர்100/90 – 18 ட்யூப்லெஸ்

(ட்யூப் Denim Trim )

பின்புற டயர்140/70 – 17 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி–
ஸ்டார்டர் வகைஎலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம்2168 mm
அகலம்–
உயரம்–
வீல்பேஸ்1418 mm
இருக்கை உயரம்805 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்170 mm
எரிபொருள் கொள்ளளவு13.5 litres
எடை (Kerb)190.5 kg

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக் நிறங்கள்

2023 harley davidson x 440 yellow
denim yellow x440
2023 harley davidson x 440 silver
silver x440
2023 harley davidson x 440 red
Harley-davison x440 Metallic Thick Red
harley x440 bike specs and on-road price
matte black x440

2023 Harley-Davidson X440 On-road Price in Tamil Nadu

2023 ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, வேலூர், திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெய்வேலி, கடலூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, ஓசூர், ஈரோடு, செங்கல்பட்டு, திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் காஞ்சிபுரம், காரைக்காலில் கிடைக்கும்.

Harley-Davidson X440 Prices

  • X440 Denim ₹. 2,73,656 லட்சம்
  • X440 Vivid ₹. 307,540 லட்சம்
  • X440 S ₹. 3,37,645 லட்சம்

(Tamil Nadu on-Road Price)

Harley-Davidson X440 Rivals

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிற்கு நேரடியாக போட்டியை 350சிசி-450சிசி வரை உள்ள பல்வேறு மாடல்கள் போட்டியாக அமைந்துள்ளன. குறிப்பாக,  ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350, டிரையம்ப் ஸ்பீடு 400, டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X  ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள், ஹோண்டா சிபி 350, ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Faq Harley-Davidson X440

ஹார்லி-டேவிட்சன் X440 பைக் பவர் எவ்வளவு ?

440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் டாப் ஸ்பீடு ?

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் டாப் ஸ்பீடு 145Kmph ஆகும்.

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

35Kmpl மைலேஜ் X440 பைக் வழங்கும் என ஹார்லி-டேவிட்சன் தெரிவித்துள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X440 பைக் ஆன்-ரோடு விலை ?

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் ஆன்-ரோடு விலை
X440 Denim ₹. 2,73,656 லட்சம்
X440 Vivid ₹. 307,540 லட்சம்
X440 S ₹. 3,37,645 லட்சம்

ஹார்லி-டேவிட்சன் X440 புகைப்படங்கள்

harley-davidson x440 bike
harley-davidson x440 denim variant
harley-davidson x440-variants explained
harley-davidson x440 s variant
x440
harley-davidson x440 vivid variant
harley x440 bike
harley-davidson x440 launched
harley-davidson x440 cluster
harley x440 headlight
x440 bike news in tamil
harley x 440 tank
2023 harley davidson x 440 red
Harley-davison x440 Metallic Thick Red
2023 harley davidson x 440 silver
silver x440
2023 harley davidson x 440 yellow
denim yellow x440
harley x440 bike specs and on-road price
matte black x440
x440 bike
harley x 440 rear view
harley x440 left front view
harley-davidson x440
Harley-Davidson X 440 bike front view
ஹார்லி-டேவிட்சன் X440
ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் பின்புறம்
harley-davidson-x440-bike-engine
ஹார்லி-டேவிட்சன் X440
x440 bike variants difference
harley davison x440 bike
harley-davidson-x440-engine
ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் என்ஜின்
Harley-Davidson X440
Harley-Davidson X440 headlight
Harley-Davidson X440 rear view
Harley-Davidson X440
2023 harley davidson x 440 matte black

ஹார்லி-டேவிட்சன் நிறுவன X440 மோட்டார்சைக்கிள் என்ஜின் விபரம், நுட்பவிபரங்கள், நிறங்கள், வசதிகள் மற்றும்ஆன-ரோடு விலை. Harley-Davidson X440 Motorcycle on-road Price, Specs, Mileage and details

Product Brand: Harley-Davidson

Editor's Rating:
4.2

Pros

  • சிறப்பான ரெட்ரோ தோற்றம்
  • கையாளுதல் மற்றும் செயல்திறன் மிக்க என்ஜின்
  • பட்ஜெட் விலையில் ஹார்லி-டேவிட்சன் பைக்
  • சிறந்த டார்க் வழங்கும் என்ஜின்

Cons

  • டாப் வேரியண்டின் விலை கூடுதலாக உள்ளது.
  • 100 கிமீ வேகத்திற்கு மேல் சிறிது அதிர்வுகள் உள்ளன.
Tags: Harley-Davidson X440
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan