மிகவும் சவாலான விலையில் வந்துள்ள ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கில் மூன்று விதமான வேரியண்ட் வழங்கப்பட்டு, பல்வேறு மாறுபாடுகளை பெற்றுள்ளதால் வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம்.
Denim, Vivid, மற்றும் S என பொதுவாக மூன்று வேரியண்டும் 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
2023 Harley-Davidson X440 Variants Explained
ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்றதாக விளங்குகின்ற ஹார்லி எக்ஸ் 440 பைக்கில் மொத்தமாக நான்கு விதமான நிறங்களை பெற்றுள்ளது. நேரடியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஜாவா 350, ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 மற்றும் ட்ரையம்ப் 400cc ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
மற்றபடி, பொதுவாக எல்இடி ஹெட்லைட், யூஎஸ்பி போர்ட், டூயல் சேனல் ஏபிஎஸ், ஆட்டோ ஹெட்லேம்ப் ஒளிரும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.
HD X440 Denim
ஆரம்ப நிலை வேரியண்டாக அறிவிக்கப்பட்டுள்ள ஹார்லி எக்ஸ் 440 டெனீம் மாடலின் விலை ரூ.2,29 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்டர்டு டெனிம் என்ற ஒற்றை நிறத்தை கொண்டுள்ள இந்த வேரியண்டில் ஸ்போக்டு வீல் கொண்டதாக வந்துள்ளது.
HD X440 Vivid
இரண்டாவது வேரியண்டில் டூயல் டோன் பெற்ற டார்க் சில்வர், சிவப்பு நிறம் ஆகியவற்றில் கிடைக்கின்ற x440 விவிட் ரூ.2,49 லட்சம் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்டில் ஸ்போக்டூ வீலுக்கு பதிலாக அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.
HD X440 S
டாப் வேரியண்ட் எக்ஸ் 440 எஸ் விலை ரூ.2.69 லட்சம் ஆக உள்ளது. இந்த வேரியண்டில் டைமண்ட் கட் அலாய் வீல், பிராண்ஸ்டு என்ஜின் வசதி, கனெக்டேட் வசதிகளை பெறுகின்றது. மேட் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கின்றது.
கனெக்ட் வசதி மூலம் 3.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே, நிகழ் நேரத்தில் எரிபொருள் இருப்பு, ரேஞ்ச் டிஸ்ப்ளே, கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ஸ்பீடோமீட்டர், டர்ன் இன்டிகேஷன், ஹை பீம் இன்டிகேட்டர், ஏபிஎஸ் அலர்ட், சைட் ஸ்டாண்ட் அலர்ட், சர்வீஸ் இன்டிகேஷன், குறைந்த எரிபொருள் எச்சரிக்கை, நியூட்ரல் பொசிஷன் இன்டிகேட்டர் ஆகியவற்றை பெற்றுள்ளது.
டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், அழைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் நிராகரிப்பது, ஸ்மார்ட்போன் பேட்டரி நிலை, தவறவிட்ட அழைப்பு எச்சரிக்கை, செய்தி எச்சரிக்கை மற்றும் நெட்வொர்க் ஸ்டெர்ன்த் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மற்ற பொதுவான அம்சங்கள் அனைத்து வேரியண்டிலும், ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் மைலேஜ் 35km/l என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹார்லி எக்ஸ் 440 மாடலின் பரிமாணங்கள் 2168 mm நீளம், வீல்பேஸ் 1418 mm மற்றும் இருக்கை உயரம் 805 mm மற்றும் 178 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று 181 கிலோ எடை கொண்டுள்ளது. முன்புறத்தில் 100/90 X 18 டயர் மற்றும் பின்புறத்தில் 140/70 X 17 டயரும் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் 18 அங்குல சக்கரம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. 320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 mm டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.
Harley-Davidson X440 Variants | Prices (ex-showroom) |
X440 Denim | ₹. 2.29 லட்சம் |
X440 Vivid | ₹. 2.49 லட்சம் |
X440 S | ₹. 2.69 லட்சம் |
முன்பதிவு 4, 2023 மாலை 4.40 மனி முதல் துவங்க உள்ளது. தமிழ்நாட்டில் எக்ஸ் 440 பைக் மாடல் சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, வேலூர், திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெய்வேலி, கடலூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, சென்னை | ஓசூர், ஈரோடு, செங்கல்பட்டு, திண்டுக்கல், நாகர்கோயில் மற்றும் காஞ்சிபுரம், காரைகாலில் கிடைக்கும்.