Automobile Tamilan

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

tvs jupiter 110 stardust edition

டிவிஎஸ் மோட்டாரின் பிரபலமான ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் ஸ்பெஷல் எடிசனை ஸ்டார் டஸ்ட் பிளாக் என்ற நிறத்தை பெற்றதாக விற்பனைக்கு ரூ.97,436 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் டிஸ்க் அடிப்படையில் நிறத்தை முழுமையான கருப்பினை பெற்றுள்ளது. டிஸ்க் பிரேக்கினை முன்புறத்தில் பெற்று பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை ஜூபிடர் 110 பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் எவ்விதமான மெக்கானிக்கல் சார்ந்த மாற்றங்களும் இல்லாமல் 113.3cc என்ஜின் அதிகபட்சமாக 6,500rpm-ல் 7.91bhp பவர் மற்றும் 9.8Nm @ 5000rpm (with Assist) 9.2Nm @ 5000rpm (without Assist) டார்க் பெற்று சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றுள்ள நிலையில் பிரான்ஸ் நிறத்திலான லோகோ மற்றும் பேட்ஜிங் பெற்று கிக் ஸ்டார்டர் ஆப்ஷனல் ஆக்செரீஸாக மட்டுமே வழங்கப்படுகின்றது.

சிறந்த பூட்ஸ்பேஸ், மைலேஜ், என்ஜின் தரம் ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மாடலுக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கடும் சவாலினை ஏற்படுத்துகின்றது.

Exit mobile version