Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

by MR.Durai
16 June 2025, 5:25 am
in Honda Bikes
0
ShareTweetSend

honda activa 2024 model

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

2025 Honda Activa

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனத்தின் 110cc ஆக்டிவா ஆரம்பத்தில் 6ஜி என்று அழைக்கப்பட்டு வந்தாலும் கூட தற்பொழுது ஆக்டிவா என்று அழைக்கப்படுகிறது.

ஆக்டிவா ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு மிகச் சிறப்பான வகையில் ஆன டிசைனை கொண்டிருப்பதுடன் மெட்டல் பாடியுடன் பல்வேறு நிறங்கள் கொண்டு இளைய தலைமுறை முதல் குடும்பங்கள் வரை கொண்டாடும் வகையிலான வரவேற்பினை பெற்றிருக்கின்றது.

ஆக்டிவா 110 OBD-2B மாடலில் ஏர்-கூல்டு, 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 7.8hp மற்றும் 5,250rpm-ல் 9Nm டார்க் வழங்கும். கூடுதலாக OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கும் ஏற்ற அம்சத்துடன் விளங்குகின்றது.

அன்டர் போன் ஃபிரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் யூனிட் ஸ்விங் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் பரிமாணங்கள் நீளம் 1833மிமீ, அகலம் 697மிமீ மற்றும் உயரம் 1156 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1260 மிமீ பெற்று 162மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாக உள்ளது.

இருக்கையின் நீளம் 692 மிமீ மற்றும் 5.3 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 106 கிலோ எடை கொண்டது. முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது. முதன்முறையாக 110சிசி ஸ்கூட்டரில் இந்தியாவில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்ற மாடல் என்ற பெருமையை மட்டுமல்லாமல் கீலெஸ் ரிமோட் கண்ட்ரோல் வசதியை பெற்றுள்ளது. டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள ஆக்டிவா 6G முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் பின்புறத்தில் 90/100-10 53J டயர் உள்ளது.

STD, DLX மற்றும் H-Smart என மூன்று விதமான வேரியண்டினை பெறும் நிலையில் STD மாடல் ஹாலஜென் விளக்கும், DLX மற்றும் H-Smart என இரண்டும் எல்இடி விளக்குகளை பெறுகின்றது.

சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டத்துடன் H-ஸ்மார்ட் கீ பெற்ற ஸ்கூட்டரில் சாவி இல்லாத செயல்பாடுகளை வழங்குகின்றது. இதனால், ஸ்டார்ட் செய்ய சைடு லாக் அல்லது திறக்க உதவுதல், இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்பை பயன்படுத்த மற்றும் முன்புறத்தில் உள்ள சுவிட்சை பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப மூடியைத் திறப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் செய்யலாம். பார்க்கிங்கில் உள்ள ஸ்கூட்டரை கண்டறியவும் இதனை பயன்படுத்தலாம். மேலும், ஸ்கூட்டர் திருட்டினை முற்றிலும் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  • ACTIVA STD Rs.79,955
  • ACTIVA DLX Rs.82,455
  • ACTIVA H-SMART Rs.85,955

 

  • ACTIVA STD-OBD2B Rs.85,222
  • ACTIVA DLX-OBD2B Rs.94,741
  • ACTIVA SMART-OBD2B Rs.97,742

(Ex-showroom)

 

2025 honda activa 110 tft cluster

2025 Honda Activa 110 on-Road Price Tamil Nadu

ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • ACTIVA STD Rs.99,653
  • ACTIVA DLX Rs.1,02,432
  • ACTIVA H-SMART Rs.1,06,591
  • ACTIVA STD-OBD2B Rs.1,03,675
  • ACTIVA DLX-OBD2B Rs.1,13,908
  • ACTIVA SMART-OBD2B Rs.1,17,896

(on-road Price in TamilNadu)

  • ACTIVA STD Rs.88,235
  • ACTIVA DLX Rs.90,990
  • ACTIVA H-SMART Rs.95,431
  • ACTIVA STD-OBD2B Rs.95,675
  • ACTIVA DLX-OBD2B Rs.1,04,098
  • ACTIVA SMART-OBD2B Rs.1,07,696

(on-road Price in Pondicherry)

2025 Honda Activa rivals

2025 ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக ஜூபிடர், பிளெஷர் பிளஸ், ஜூம் 110, டியோ 110 உட்பட பல மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Faqs About Honda Activa 110

ஹோண்டா ஆக்டிவா 110 என்ஜின் விபரம் ?

OBD-2B ஏர்-கூல்டு, 109.51cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 7.8hp மற்றும் 5,500rpm-ல் 9Nm டார்க் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா மைலேஜ் எவ்வளவு ?

ஹோண்டா ஆக்டிவா 110 மைலேஜ் லிட்டருக்கு 48-52 கிமீ வரை வழங்கும்.

2025 Honda Activa 110 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஹோண்டா ஆக்டிவா ஆன்-ரோடு விலை ரூ.1.03 லட்சம் முதல் ரூ.1.17 லட்சம் வரை ஆகும்.

Related Motor News

920 கோடி முதலீட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் ஹோண்டா இந்தியா

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

58.31 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா

ரூபாய் 85,222 விலையில் 2025 ஹோண்டா ஆக்டிவா 110 விற்பனைக்கு வெளியானது.!

110cc ஹோண்டா டியோ விற்பனைக்கு அறிமுகமானது

ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டாவின் 2025 ஆக்டிவா போட்டியாளர்கள் ?

ஹோண்டா 2025 ஆக்டிவா மாடலுக்கு போட்டியாக டிவிஎஸ் ஜூபிடர், பிளெஷர் பிளஸ், டியோ 110 போன்றவை உள்ளன.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்பொழுது?

எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்கு ஹோண்டா ஆக்டிவா விற்பனைக்கு கிடைக்கின்றது.

ஹோண்டா ஆக்டிவா 110 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 47 x 63.121 mm
Displacement (cc) 109.51 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 7.8 hp (5.77 Kw) at 8,000 rpm
அதிகபட்ச டார்க் 8.9Nm @ 5,500rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் அட்ஜெஸ்டபிள் காயில் ஸ்பிரிங்
பிரேக்
முன்புறம் டிரம் 130 mm
பின்புறம் டிரம் 130 mm (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்/SMW
முன்புற டயர்  90/90-12 54J ட்யூப்லெஸ்
பின்புற டயர் 90/100-12 53J ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-3.0Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 1833 mm
அகலம் 697 mm
உயரம் 1156 mm
வீல்பேஸ் 1260 mm
இருக்கை உயரம் 770 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 162 mm
எரிபொருள் கொள்ளளவு 5.3 litres
எடை (Kerb) 105 kg (Smart) – 106 kg (DLX,STD)

2025 Honda Activa 110 Scooter Image Gallery

2025 honda activa 110 price
2025 honda activa 110 tft cluster
2024 honda activa red
2024 honda activa white
2024 honda activa black
2024 honda activa grey
2024 honda activa colours
2024 honda activa blue
honda activa white colour
honda activa 2024 model
honda-activa-6g-h-smart
activa-smart
activa-6g-smart-key
2023-Honda-Activa-blue-color-pic
activa-smart
honda activa h-smart
2023-Honda-Activa-blue-color-pic-1
2024 honda activa h smart

Last Updated – 01/03/2025

Tags: 110cc ScootersHonda ActivaHonda Activa 6G
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Honda CB350 H'ness on-road price

2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2025 ஹோண்டா எஸ்பி 125

2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

அடுத்த செய்திகள்

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan