2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா SP160

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் புதிய எஸ்பி 160 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

புதிய SP160 பைக்கினை பொறுத்தவரை முன்பாக விற்பனையில் உள்ள எஸ்பி 125 பைக்கின் வடிவமைப்பினை பயன்படுத்திக் கொண்டு யூனிகார்ன் 160 பைக்கின் என்ஜின் மற்றும் ஃபிரேம் உள்ளிட்ட அம்சங்களை பகிர்ந்து கொண்டாலும் ஸ்போர்ட்டிவான தோற்ற வடிவமைப்பினை கொண்டு புதிய எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் என அனைத்தும் சிறிய மாற்றங்களுடன், பாடி கிராபிக்ஸ் என அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13hp பவர், 14.58 NM டார்க் ஆனது 5250rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.

2025 எஸ்பி 160 பைக் மாடலின் பரிமாணங்கள் 2,061 மிமீ நீளம், 786 மிமீ அகலம் மற்றும் 1,113 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,347 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 796 மிமீ மற்றும் 177 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது. பெற்றுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 17 அங்குல வீலுடன் முன்பக்கத்தில் 80/100-17M/C 46P மற்றும் பின்புறத்தில் 130/70-17M/C 62P டயருடன் இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக இரு விதமான வேரியண்ட் கொண்டுள்ளது.

தொடுதிரை அல்லாத 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ள கிளஸ்ட்டரின் மூலம் ஹோண்டாவின் ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

  • SP160 Single Disc Rs. 1,21,951
  • SP160 Double Disc Rs. 1,27,956

(Ex-showroom)

honda sp125 tft cluster

Honda SP 160 on-Road Price Tamil Nadu

2025 ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

SP160 Single Disc – ₹.1,49,964

SP160 Dual Disc – ₹ 1,56,456

(All Prices on-road Tamil Nadu)

SP160 Single Disc – ₹.1,34,957

SP160 Dual Disc – ₹ 1,41,751

(All Prices on-road Pondicherry)

2025 ஹோண்டா எஸ்பி 160 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகைஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke57.300 mm x 63.096 mm
Displacement (cc)162.71 cc
Compression ratio10:01
அதிகபட்ச பவர்13 hp (9.9Kw) at 7500 rpm
அதிகபட்ச டார்க்14.58 Nm  at 5500 rpm
எரிபொருள் அமைப்புFuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன்5 ஸ்பீடு
கிளட்ச்வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம்மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம்டிஸ்க் 276 mm (ABS)
பின்புறம்டிஸ்க் 220 mm / 130 mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகைஅலாய்
முன்புற டயர்80/100-17M/C 46P ட்யூப்லெஸ்
பின்புற டயர்130/70-17M/C 62P ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகைஎலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம்2061 mm
அகலம்766 mm
உயரம்1113 mm
வீல்பேஸ்1347 mm
இருக்கை உயரம்796 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்177 mm
எரிபொருள் கொள்ளளவு12 litres
எடை (Kerb)139 kg (Drum) / 141 Kg (Disc)

ஹோண்டா எஸ்பி 160 நிறங்கள்

ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், முத்து இக்னியஸ் பிளாக், பெர்ல் டீப் கிரவுண்ட் கிரே மற்றும் அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக் என நான்கு விதமான நிறங்களில் எஸ்பி160 2025 மாடல் கிடைக்கின்றது.

2025 Honda SP160 Rivals

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற யமஹா FZS-Fi V4 Dlx, சுசூகி ஜிக்ஸர் 15, பல்சர் NS160, பல்சர் N160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி, மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி மற்றும் யூனிகார்ன் 160 ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.

Faqs ஹோண்டா எஸ்பி 160

2025 ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்-ரோடு விலை விபரம் ?

தமிழ்நாட்டில் 2025 ஹோண்டா எஸ்பி 160 ஆன்-ரோடு விலை ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.57 வரை அமைந்துள்ளது.

2025 ஹோண்டா எஸ்பி 160 என்ஜின் விபரம் ?

OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13hp பவர், 14.58 NM டார்க் ஆனது 5250rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.

2025 ஹோண்டா SP160 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

2025 ஹோண்டா SP160 பைக்கின் மைலேஜ் 45-48 கிமீ வழங்கலாம்.

SP160 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

ஹோண்டா எஸ்பி 160 போட்டியாளர்கள் யூனிகார்ன் 160, யமஹா FZS-Fi V4 Dlx, சுசூகி ஜிக்ஸர், பல்சர் NS160, பல்சர் N160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி, மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி

எஸ்பி 160 பைக்கின் வேரியண்ட் விபரம் ?

இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் அல்லது ஒற்றை டிஸ்க்குடன் ஏபிஎஸ் உள்ளது.

2025 Honda SP 160 Bike Image Gallery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *