Automobile Tamilan

டிவிஎஸ் ரோனின் 225 பைக்கில் சிறப்பு எடிசன் அறிமுகம்

tvs ronin festival edition

பிரசத்தி பெற்ற ரெட்ரோ ஸ்டைல் கொண்ட டிவிஎஸ் ரோனின் பைக்கில் ஆரம்ப நிலை SS வேரியண்ட் ரூ.15,000 விலை குறைக்கப்பட்டிருப்பதுடன், பண்டிகை கால சிறப்பு எடிசனும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

ஹண்டர் 350, W175 உட்பட பல்வேறு ரெட்ரோ தோற்றத்தை கொண்ட ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்களுக்கு சவால் விடுக்கின்ற ரோனின் 225 பைக்கில்  225.9 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20.1 HP பவர் மற்றும் 19.93 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

17 அங்குல வீல் பொருத்தப்பட்டுள்ள இந்த மாடலில் யூஎஸ்டி ஃபோர்க் ( சில வேரியண்டுகளில் கோல்டு நிறத்தில்) மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. ரோனின் மாடலில் உள்ள (SS, DS என இரண்டிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்) டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் அர்பன் மற்றும் ரெயின் என இரண்டு மோட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்ரோ ஸ்டைலை கொண்ட மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு, கனெக்ட்டிவிட்டி வசதிகளை டாப் வேரியண்ட் பெறுகின்ற நிலையில் மற்ற வேரியண்டுகளில் கனெக்ட்டிவ் வசதிகள் இல்லை.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஃபெஸ்டிவல் சிறப்பு எடிசனில் நீல நிறத்தை கொண்டு மற்றபடி, வழக்கமாக டாப் TD வேரியண்டில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கின்றது.

(Ex-showroom Tamil Nadu)

Exit mobile version