Automobile Tamilan

ஹீரோ ஹூரகேன், ஹூரகேன் 440 அறிமுகம் எப்பொழுது ?

xtreme 1.r

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹூரகேன் மற்றும் ஹூரகேன் 440 என இரண்டு பெயர்களை காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. சமீபத்தில் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 வெளியான மாடலை அடிப்படையாக கொண்ட ஹூரகேன் 440 பைக்கை ஹீரோ வெளியிட திட்டமிட்டுள்ளது.

440cc என்ஜின் பெற்ற X440 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. எனவே, இந்த என்ஜினை ஹீரோ மோட்டோகார்ப் பயன்படுத்திக் கொள்ள உள்ளது.

Hero Hurkian and Hurikan 440

தற்பொழுது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், Hurkian மற்றும் Hurikan 440  என்ற பெயருக்கான காப்புரிமையை பதிவு செய்துள்ளது. ஹார்லி மற்றும் ஹீரோ கூட்டணியில் உருவான முதல் மாடலான ஸ்டீல் டெர்ல்லிஸ் ஃபிரேம் பெற்ற X440 அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், இதன் அடிப்படையில் ரெட்ரோ ஸ்டைல் அல்லாத ஸ்டைலிஷான ஸ்போர்ட்டிவ் மாடலாக ஹூரகேன் அமைந்திருக்கலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில் கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை வெளியிட்டுள்ள நிலையில், அடுத்த ஒரு ஆண்டுக்குள் 6க்கு மேற்பட்ட பிரீமியம் பைக்குகளை 150சிசி-450சிசி வரையிலான சந்தையில் வெளியிட உள்ளது.

Exit mobile version