Automobile Tamilan

சோதனையில் குறைந்த விலை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 160 வருகையா.?

 

hero xpulse 160 spied first time new 1

சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ் 160 அல்லது இம்பல்ஸ் பைக்கினை அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு ரூ.1.40 லட்சத்துக்கு குறைவான விலையில் எதிர்பார்க்கலாம்.

எக்ஸ்பல்ஸ் 200 மாடல் OBD-2B மேம்பாடு தற்பொழுது வரை பெறாத நிலையில், புதிய வந்துள்ள எக்ஸ்பல்ஸ் 210 ஆரம்ப விலை ரூ.1.75 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், பட்ஜெட் விலையில் அட்வென்ச்சர் பைக் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாடலை ஹீரோ தயாரித்து வருகின்றது.

சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் முழுமையாக முக்காடு மூலம் மறைக்கப்பட்டுள்ள நிலையில், டிசைன் அம்சங்களை பொறுத்தவரை தற்பொழுதுள்ள 200சிசி எக்ஸ்பல்ஸ் போலவே அமைந்திருக்கின்றது.

எஞ்சின் பகுதியில் உள்ள கேஸ் அமைப்பு எக்ஸ்ட்ரீம் 160 4வி மாடலில் உள்ள எஞ்சினை போலவே தெரிகின்றது. மற்றபடி, பெரும்பாலான ஸ்டைலிங் அம்சங்கள் எக்ஸ்பல்ஸ் 200 போலவே அமைந்துள்ளதால், அனேகமாக எக்ஸ்பல்ஸ் 160 மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே, ஹீரோவின் இம்பல்ஸ் மாடலை தழுவியதாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுவதனால் விலை ரூ.1.50 லட்சத்துக்குள் வரக்கூடும்.

 

Exit mobile version