Categories: Bike News

சுசூகி ஜிக்ஸர் 250 பைக் என்ஜின் விபரம் வெளியானது

இந்திய சந்தையில் சுசூகி பைக் நிறுவனம், புதிதாக சுசூகி ஜிக்ஸர் 250 பைக் மாடலை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்நிலையில் ஜிக்ஸர் 250 என்ஜின் காப்புரிமை படங்கள் வெளியானது.

சுசூகி ஜிக்ஸர் 250 பைக்

இந்திய சந்தையில் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கும் சுசூகி ஜிக்ஸர் வரிசையில் இடம்பெற்றுள்ள 150 சிசி ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் SF மாடல்களை தொடர்ந்து பிரிமியம் சந்தையில் புதிதாக 250சிசி என்ஜின் பெற்ற ஜிக்ஸர் மாடலை இந்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

வெளிவந்துள்ள படங்கள் வாயிலாக 250சிசி என்ஜின் விலை குறைவாக அமைதிருக்க வேண்டி லிக்யூடு கூலிங் சிஸ்டத்திற்கு மாற்றாக ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் சிஸ்டத்தடன் ஒற்றை சிலிண்டர் , 4 வால்வுகளுடன் கூடிய SOHC பெற்றிருக்கின்றது.  வரவள்ள பிஎஸ் 6 மாசு விதிகளுக்க ஏற்ற வகையலும் , மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த 250சிசி என்ஜின் அதிகபட்மாக 22 பிஎஸ் முதல் 25 பிஎஸ் வரையில் பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அதிகார்வப்பூர்வமான பவர் மற்றும் டார்க் விபரங்கள் வெளியாகவில்லை.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா FZ25, ஃபேஸர் 25 ஆகிய மாடல்களை எதிர்கொள்ள களமிறங்க உள்ள ஜிக்ஸர் 250 பைக் மாடல், புதிதாக வரவுள்ள இந்த மாடல் கேடிஎம் டியூக் 250, பல்சர் 250, ஆகிய மாடல்களை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

நேக்டு ஸ்போர்ட்டிவ் மாடலாக சுசூகி ஜிக்ஸர் 250 பைக் விலை ரூ.1.20 லட்சத்தில் அமைந்திருக்கலாம். இதைத் தவிர முழமையாக ஃபேரிங் செய்யப்பட்ட சுசூகி ஜிக்ஸர் 250 SF மாடல் விலை ரூ. 1.30 லட்சத்தில் வெளிவரலாம். இந்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வெளிவரவுள்ளது.