Automobile Tamilan

ரூ.96,000 விலையில் ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது..!

vida v2 electric scooter launchedஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலெக்ட்ரிக் பிராண்டின் புதிய V2 மாடல் 96,000 முதல் ரூ.1,35,000 வரையிலான விலையில் தற்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விடா வி2 நாடு முழுவதும் 500க்கு மேற்பட்ட டீலர்களில் கிடைக்க உள்ளது.

முக்கிய குறிப்புகள்

ஹீரோ Vida V2 ஸ்கூட்டர்

விடா புரோ மற்றும் பிளஸ் மாடல்கள் முந்தைய மாடல் போல விடா வி1 போல அமைந்து இருந்தாலும் இதனுடைய வேகம் மற்றும் செயல் திறன் சார்ந்த வகையில் மாறுபட்டு உள்ளதால் கூடுதல் ரேஞ்ச் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Eco, Ride, Sport, Custom என நான்கு ரைடிங் மோடுகளை பெற்று அதிகபட்சமாக 6 KW பவர் மற்றும் 25 Nm வெளிப்படுத்தும் வி2 புரோ மாடலில் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆக உயர்த்தப்பட்டு 3.94Kwh பேட்டரி ஆனது 2×1.97 Kwh பேட்டரி  ஆக உள்ளது. இதன் ரேஞ்ச் 116 கிமீ ஆகும்.

Eco, Ride, Sport என மூன்று ரைடிங் மோடுகளை பெற்று அதிகபட்சமாக 6 KW பவர் மற்றும் 25 Nm வெளிப்படுத்தும் வி2 பிளஸ் மாடலில் டாப் ஸ்பீடு மணிக்கு  கிமீ ஆக உயர்த்தப்பட்டு 3.4Kwh பேட்டரி ஆனது 2×1.72 Kwh பேட்டரி  ஆக உள்ளது. இதன் ரேஞ்ச் 100 கிமீ ஆகும்.

Eco, Ride என இரு ரைடிங் மோடுகளை பெற்று அதிகபட்சமாக 6 KW பவர் மற்றும் 25 Nm வெளிப்படுத்தும் வி2  மாடலில் டாப் ஸ்பீடு மணிக்கு 69 கிமீ ஆக உள்ள நிலையில் 2.2Kwh பேட்டரி பெற்று  IDC ரேஞ்ச் 94 கிமீ ஆக கூறப்பட்டாலும் நிகழ் நேரத்தில் ஈகோ மோடில் கிடைக்கின்ற உண்மையான ரேஞ்ச் 69 கிமீ என உறுதியாகியுள்ளது.

VIDA V2 Price list three variants –

(ex-showroom)

க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7-இன்ச் TFT தொடுதிரை பெறுகின்ற விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வாகன டெலிமாடிக்ஸ், பேட்டரி ஸ்டேட்-ஆஃப் சார்ஜ் (SoC) மற்றும் பல உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.

VIDA V2 ஸ்கூட்டரும் வலுவான 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வாகன உத்தரவாதத்துடன், பேட்டரி பேக் 3 ஆண்டு அல்லது 30,000 கிமீ உத்தரவாதத்தினை விடா வழங்குகின்றது.

Vida V2 vs Vida V1 e scooter Specs
Exit mobile version