Automobile Tamilan

யமஹா ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – ஏப்ரல் 2023

yamaha scooters on road price list 2023

இந்திய சந்தையில் யமஹா நிறுவனம் 125cc மற்றும் பிரீமியம் 155cc என இரண்டு பிரிவுகளில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. என்ஜின், சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் என அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

பொதுவான 125cc என்ஜினை கொண்டுள்ள மாடல்கள் ஃபேசினோ 125 , ரே ZR 125, ரே ZR ஸ்டீரிட் ரேலி 125 மற்றும் ஏரோக்ஸ் 155 என ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. கொடுக்கப்பட்டுள்ள விலை விபரம் தோராயமானதாகும்.

2023 Yamaha Fascino 125

கிளாசிக் ஸ்டைலை பெற்ற 125cc மாடல்களில் ஒன்றான ஃபேசினோ ஸ்கூட்டரில் யமஹா Y-Connect வசதியை பெற்று OBD-2 மற்றும் E20 எரிபொருள் ஆதரவினை கொண்ட என்ஜின் 8.2PS பவரை 6500rpm-ல் வழங்குகின்றது. வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் கொண்டு டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான பிரேக்கிங் அம்சத்தை பெற்றுள்ளது. யமஹா ஃபேசினோ ₹ 80,598 முதல் ₹ 93,650 வரை தமிழ்நாடு விற்பனையக விலை உள்ளது.

2023 Yamaha Fascino 125
என்ஜின் (CC) 125 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 8.2 bhp @ 6500 rpm
டார்க் (Nm@rpm) 10.3 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 48 Kmpl

ஃபேசினோ 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125, சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 ஆகும்.

2023 யமஹா ஃபேசினோ ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 99,985 முதல் ₹ 1,14,556 வரை ஆகும்.

2023 Yamaha Ray ZR 125

ஸ்போர்ட்டிவான ஸ்டைலை பெற்றுள்ள யமஹா ரே இசட் ஆர் 125 ஸ்கூட்டரிலும் டிரம் அல்லது டிஸ்க் என இரு பிரேக் ஆப்ஷனுடன் யமஹா Y-Connect வசதியை பெற்றுள்ள இந்த மாடலிலும் 125cc என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

யமஹா Ray ZR ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ₹ 85,010 முதல் ₹ 91,410 வரை தமிழ்நாடு விற்பனையக விலை உள்ளது.

2023 Yamaha Ray ZR 125
என்ஜின் (CC) 125 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 8.2 bhp @ 6500 rpm
டார்க் (Nm@rpm) 10.3 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 47 Kmpl

ரே ZR 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள்  ஸ்கூட்டரின் போட்டியாளராக டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ் 125, சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட், ஹோண்டா கிரேஸியா மற்றும் டெஸ்ட்டினி 125 போன்றவை உள்ளது.

2023 யமஹா ரே ZR 125 ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,01,985 முதல் ₹ 1,09,556 வரை ஆகும்.

2023 Yamaha Ray ZR street Rally 125

மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் ரே இசட்ஆர் மாடலை அடிப்படையாக கொண்ட ஸ்ட்ரீட் ரேலி 125 ஸ்கூட்டரும் என்ஜினை பொதுவாக பகிர்ந்து கொள்ளுகின்றது. இந்த மாடலில் டிஸ்க் பிரேக் மட்டும் பெற்று நவீனத்துவமான பாடி கிராபிக்ஸ் கொண்டுள்ளது.

யமஹா Ray ZR ஸ்டீரிட் ரேலி 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ₹ 94,410 முதல் ₹ 95,410 வரை தமிழ்நாடு விற்பனையக விலை உள்ளது. ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டரின் போட்டியாளர்கள்  ஸ்கூட்டரின் போட்டியாளராக டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ் 125, சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட், ஹோண்டா கிரேஸியா மற்றும் டெஸ்ட்டினி 125 போன்றவை உள்ளது.

2023 Yamaha Ray ZR Street Rally 125
என்ஜின் (CC) 125 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 8.2 bhp @ 6500 rpm
டார்க் (Nm@rpm) 10.3 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 48 Kmpl

2023 யமஹா ரே ZR 125 ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,13,985 முதல் ₹ 1,15,156 வரை ஆகும்.

2023 Yamaha Aerox 155

யமஹா நிறுவனத்தின் பிரீமியம் ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பெற்ற ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் என்ஜின் R15, MT-15 பைக்குகளில் இடம்பெற்றுள்ள 155CC என்ஜின் ஆகும்.  VVA உடன் கூடிய 155cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 13.9Nm டார்க் வழங்க 6,500rpm மற்றும் 15bhp பவர் வெளிப்படுத்த 8000rpm-ல் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் CVT கியர்பாக்ஸுடன் வருகின்றது.

ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,42,800 ஆகும்.

2023 Yamaha Aerox 155
என்ஜின் (CC) 155 cc liquid cooled
குதிரைத்திறன் (bhp@rpm) 15 bhp @ 8000 rpm
டார்க் (Nm@rpm) 13.9 Nm @ 6500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 38 Kmpl

ஏரோக்ஸ் ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் ஏப்ரிலியா SR160, SXR 160 போன்றவை உள்ளது.

2023 யமஹா Aerox 155 ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,68,522

Exit mobile version