Automobile Tamilan

2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

hero destini prime 125

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 125சிசி டெஸ்டினி பிரைம் மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2025 Hero Destini Prime

125சிசி டெஸ்டினி ஸ்கூட்டர் வரிசையில் பிரைம் 125 சிசி புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ இன்ஜின் ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் OB 9 hp பவரினை 7000 rpm-ல் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 rpm-ல் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

5 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்ற டெஸ்டினி ஸ்கூட்டர் பரிமாணங்கள் 1809 மிமீ நீளம், 729 மிமீ அகலம் மற்றும் 1154 mm உயரம் பெற்று, 1245 மிமீ வீல்பேஸ் கொண்டதாக உள்ளது. 155 மிமீ வீல்பேஸ் மற்றும் 1115 கிலோ வரை பொறுத்து மாறுபடுகின்றது. டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள ஸ்கூட்டரில் இரண்டு பக்கமும் பொதுவாக 90/100-10 டயர் வழங்கப்பட்டுள்ளது.

டெஸ்டினி  இருபக்க டயர்களில் 130 மிமீ டிரம் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக உள்ளது. எக்ஸ்டெக் வசதி பெறுகின்ற டாப் எக்ஸ்டெக் வேரியண்ட் எல்இடி ஹெட்லேம்ப் உடன் ப்ளூடூத் இணைப்பு மூலம் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் பெறலாம்.

டெஸ்டினி பிரைம் மாடலை வித்தியாசப்படுத்தும் வகையில், பாடி நிறத்திலான ரியர் வியூ மிரர், டிஜி அனலாக் கிளஸ்ட்டர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், பூட் லைட், எல்இடி குயிட் லேம்ப் ஆகியவற்றை கொண்டதாக வந்துள்ளது.

(Ex-showroom Tamil Nadu)

ஹீரோ டெஸ்டினி பிரைம் நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 52.4 x 57.8 mm
Displacement (cc) 124.6 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 9 hp (6.7 Kw) at 7,000 rpm
அதிகபட்ச டார்க் 10.4 Nm  at 5,500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் அட்ஜெஸ்டபிள் காயில் ஸ்பிரிங்
பிரேக்
முன்புறம் டிரம் 130 mm
பின்புறம் டிரம் 130 mm (with SBT)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்/SW
முன்புற டயர்  90/90-10 54J ட்யூப்லெஸ்
பின்புற டயர் 90/90-10 54J ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-4Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 1809 mm
அகலம் 729 mm
உயரம் 1154 mm
வீல்பேஸ் 1245 mm
இருக்கை உயரம் 778 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 155 mm
எரிபொருள் கொள்ளளவு 5 litres
எடை (Kerb) 115 kg (Drum)

ஹீரோ டெஸ்டினி  நிறங்கள்

டெஸ்டினி பிரைம் வெள்ளை, சிவப்பு மற்றும் நீலம், கருப்பு ஆகிய நிறங்களை பெறுகின்றது.

2025 Hero Destini prime 125 on-Road Price Tamil Nadu

ஹீரோ டெஸ்டினி பிரைம் 125 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

(on-Road Tamil Nadu)

 Hero Destini prime rivals

125சிசி சந்தையில் கிடைக்கின்ற ஆக்டிவா 125, ஜூபிடர் 125, யமஹா ரே இசட் ஆர், சுசூகி ஆக்சஸ் 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகியவற்றை ஹீரோ டெஸ்டினி 125 எதிர்கொள்ளுகின்றது.

Faqs About Hero Destini prime

2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் என்ஜின் விபரம் ?

125சிசி என்ஜின் பெற்ற ஹீரோ டெஸ்டினி 9 hp பவரினை 7000 rpm-ல் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 rpm-ல் வழங்குகின்றது. சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டர் மைலேஜ் எவ்வளவு ?

ஹீரோ டெஸ்டினி 125 மைலேஜ் 48 kmpl வரை கிடைக்கும்.

ஹீரோ டெஸ்டினி பிரைம் போட்டியாளர்கள் ?

ஆக்டிவா 125, ஜூபிடர் 125, யமஹா ரே இசட் ஆர், சுசூகி ஆக்சஸ் 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகியவற்றை ஹீரோ டெஸ்டினி 125 எதிர்கொள்ளுகின்றது.

ஹீரோ டெஸ்டினி 125 பிரைம் சிறப்புகள் ?

பாடி நிறத்திலான ரியர் வியூ மிரர், டிஜி அனலாக் கிளஸ்ட்டர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், பூட் லைட், எல்இடி குயிட் லேம்ப் உள்ளது.

ஹீரோ டெஸ்டினி பிரைம் ஆன்-ரோடு விலை ?

ஹீரோ டெஸ்டினி பிரைம் ஆன்-ரோடு விலை ₹ 97,000 முதல் ₹ 1,02 லட்சம் ஆகும்.

2025 Hero Destini prime image gallery

Exit mobile version