• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

by MR.Durai
1 July 2025, 9:23 am
in Vida Electric
0
ShareTweetSend

ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற விடா எலெக்ட்ரிக் பிராண்டின் வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் V2 லைட், V2  பிளஸ், மற்றும் V2 புரோ என மூன்று விதமான வேரியண்டின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Hero Vida V2

முந்தைய விடா வி1 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடா வி2 ஸ்கூட்டரில் V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், தற்பொழுது வி2 லைட் மாடலில் 2.2Kwh, வி2 பிளஸ் வேரியண்டில் 3.44Kwh, மற்றும் வி2 புரோவில் 3.94kwh என மூன்று விதமான ஆப்ஷனை கொண்டுள்ளது.

பொதுவாக மூன்று மாடலிலும் பவர் அதிகபட்சமாக 6kw வெளிப்படுத்தினாலும் தொடர்ச்சியாக 3.9Kw மற்றும் டார்க் 25Nm கொண்டுள்ளது.

  • குறைந்த பேட்டரி திறன் பெற்ற V2 Lite வேரியண்டில் 2.2Kwh பேட்டரி பொருத்தப்பட்டு 100% சார்ஜில் 94 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 69 கிமீ கொண்டு 0-40 கிமீ எட்ட 4.2 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். ஈக்கோ, ரைட் என இரு ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 64 கிமீ பயணிக்கலாம்.  இதன் சார்ஜிங் நேரம் 0-80 % பெற 3.30 மணி நேரமும் விரைவு சார்ஜர் மூலம் நிமிடத்திற்கு 1 கிமீ தொலைவு பயணிக்கும் வகையில் சார்ஜ் ஆகின்றது.
  • இரண்டாவது மாடலாக உள்ள V2 Plus வேரியண்டில் 2×1.72Kwh அதாவது 3.44Kwh பேட்டரி பொருத்தப்பட்டு 100% சார்ஜில் 143 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 85 கிமீ கொண்டு 0-40 கிமீ எட்ட 3.4 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 100 கிமீ பயணிக்கலாம்.  இதன் சார்ஜிங் நேரம் 0-80 % பெற 5.15 மணி நேரமும் விரைவு சார்ஜர் மூலம் நிமிடத்திற்கு 1.2 கிமீ தொலைவு பயணிக்கும் வகையில் சார்ஜ் ஆகின்றது.
  • டாப் மாடல் V2 Pro வேரியண்டில் 2×1.97Kwh அதாவது 3.97Kwh பேட்டரி பொருத்தப்பட்டு 100% சார்ஜில் 165 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 90 கிமீ கொண்டு 0-40 கிமீ எட்ட 2.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். ஈக்கோ, ரைட், ஸ்போர்ட், கஸ்டம் என நான்கு ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 115 கிமீ பயணிக்கலாம்.  இதன் சார்ஜிங் நேரம் 0-80 % பெற 5.55 மணி நேரமும் விரைவு சார்ஜர் மூலம் நிமிடத்திற்கு 1.2 கிமீ தொலைவு பயணிக்கும் வகையில் சார்ஜ் ஆகின்றது.

அண்ட்ர் போன் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டு பரிமாணங்கள் வீல்பேஸ் 1,301mm மற்றும் கெர்ப் எடை 114 கிலோ கிராம் முதல் 125 கிலோ கொண்டுள்ள ஸ்கூட்டரின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 155mm ஆக உள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, 12 அங்குல அலாய் வீல் பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பெற்று வந்துள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்பக்கம் 90/90-12 மற்றும் 90/100-12 ட்யூப்லெஸ் டயருடன் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பெறுகின்றது. இந்த மாடல் 26 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

7 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடுதலாக OTA மேம்பாடு, கீலெஸ் என்ட்ரி, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் மிக முக்கியமானதாகும். வி2 எலெக்ட்ரிக் மாடலுக்கு சார்ஜர், பேட்டரி, மற்றும் மோட்டார்  வாகனத்திற்கு என 3 ஆண்டுகள் அல்லது  30,000 கிமீ எது முதலில் வருகிறதோ அதுவரை வாரண்டி வழங்கப்படுகின்றது. அடுத்து வாகனத்திற்கு 5 வருடம் அல்லது 50,000 கிமீ வரை கிடைக்கும்.

Vida V2 Ex-showroom Price

  • Vida V2 Lite – ₹ 96,000
  • Vida V2 Plus – ₹ 1,15,000
  • Vida V2 Pro – ₹ 1,35,000

ஹீரோ விடா வி2 இ-ஸ்கூட்டரின் நுட்பவிபரங்கள்

                                             V2 Pro/V2 Plus/V2 Lite
வகை எலெக்ட்ரிக்
மோட்டார் வகை PMSM மோட்டார்
பேட்டரி 3.94Kwh / 3.44Kwh/ 2.2kwh
அதிகபட்ச வேகம் 90Kmph/85kmph/69kmph
அதிகபட்ச பவர் 6 KW/3.9kw Nominal
அதிகபட்ச டார்க் 25 Nm
அதிகபட்ச ரேஞ்சு 165km/143km/94km (IDC Claimed)
சார்ஜிங் நேரம் (0-80%) 5.55 hrs/5.15hrs/3.30hrs
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Eco, Ride,Sport, Custom
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோ ஷாக்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 190 mm
பின்புறம் டிரம் 110 mm (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர்  90/90-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர்  90/100-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை போர்டபிள் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்
கிளஸ்ட்டர் 7 இஞ்ச் TFT
பரிமாணங்கள்
நீளம் –
அகலம் –
உயரம் –
வீல்பேஸ் 1301 mm
இருக்கை உயரம் 777 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 155 mm
பூட் கொள்ளளவு 26 Litre
எடை (Kerb) 114 kg-125 Kg

ஹீரோவின் விடா வி2 எலெக்ட்ரிக் நிறங்கள்

மூன்று வேரியண்டிலும் வேரியண்ட் வாரியாக நிறங்கள் அமைந்தாலும் பொதுவாக மேட் நீலம், மேட் ஆரஞ்ச், மேட் வெள்ளை, மேட் சியன், பளபளப்பான சிவப்பு மற்றும் பளபளப்பான கருப்பு என 6 நிறங்கள் உள்ளது.

2025 Hero Vida V2 Rivals

ஏதெர் 450S, 450X, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், ஓலா எஸ்1, ஏதெர் ரிஸ்டா,  ஹோண்டா QC1, ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.

Hero Vida V2 electric Scooter on-Road Price in Tamil Nadu

2025 ஹீரோ விடா வி2 லைட், வி2 பிளஸ் மற்றும் வி2 புரோ என மூன்று ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Vida V2 Lite – ₹ 1,04,654
  • Vida V2 Plus – ₹ 1,23,456
  • Vida V2 Pro – ₹ 1,44,119

(All Price on-road Tamil Nadu)

  • Vida V2 Lite – ₹ 1,04,355
  • Vida V2 Plus – ₹ 1,23,250
  • Vida V2 Pro – ₹ 1,43,910

(All Price on-road Pondicherry)

Faq விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் மைலேஜ் எவ்வளவு ?

விடா வி2 ஸ்கூட்டர்களின் உண்மையான ரேஞ்ச்.,
வி2 லைட் ஸ்கூட்டர் 64 கிமீ
வி2 பிளஸ் ஸ்கூட்டர் 100 கிமீ
வி2 புரோ ஸ்கூட்டர் 115 கிமீ

விடா V2 பவர் மற்றும் டார்க் விபரம் ?

PMSM மோட்டார் பொருத்தப்பட்டு பவர் 6Kw மற்றும் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

ஹீரோ விடா வி2 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

விடா வி2 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.04 லட்சம் முதல் ரூ.1.44 லட்சம் வரை அமைந்தள்ளது.

ஹீரோ விடா வி2 மாடலை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம்?

விடா வி2 மாடலை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் நிமிடத்திற்கு 1 கிமீ எனவும், 0-80 % பெற 3.30 நேரத்தை வி2 லைட், 5.15 மணி நேரத்தை வி2 பிளஸ் மற்றும் டாப் வேரியண்ட் வி2 புரோ 5.50 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

விடா வி2 போட்டியாளர்கள் யார் ?

டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், ஓலா எஸ்1, ஏதெர் ரிஸ்டா, 450S, 450X, ஹோண்டா QC1, ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.

Vida V2 e scooter Image Gallery

 

Tags: Hero Vida V2 liteHero Vida V2 PlusHero Vida V2 Pro
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version