Automobile Tamilan

2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

cd 110 dream deluxe price

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 110சிசி சந்தையில் கிடைக்கின்ற CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக் மாடல் 2023 ஆம் ஆண்டிற்கான E20 மற்றும் OBD2 மேம்பாடு கொண்டதாக உள்ள பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2023 Honda CD110 Dream Deluxe

ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிடி 110 டீரிம் டீலக்ஸ் பைக்கில் OBD-2 மற்றும் E20 மேம்பாடு பெற்ற 109.51cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7500rpm-ல் 8.67 hp பவர் மற்றும் 9.30 Nm at 5500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்தாக, 80/100-18 M/C 47P டீயூப்லெஸ் டயர் இரு பக்கமும் கொண்டுள்ளது. டைமண்ட் வகை சேஸ் கொண்ட சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.

CD110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் பரிமாணங்கள் 2044mm நீளம், 736mm அகலம் மற்றும் 1076mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1285mm வீல்பேஸ் பெற்று 162mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது.

கருப்பு நிறத்துடன் சிவப்பு, கருப்பு உடன் நீலம், கருப்பு நிறத்துடன் பச்சை மற்றும் கருப்பு நிறத்துடன் சாம்பல் என நான்கு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய CD110 ட்ரீம் டீலக்ஸில் HMSI நிறுவனம் சிறப்பு 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பையும் (3 வருட நிலையான + 7 வருட விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.

Honda CD 110 Dream Deluxe – ₹ 73,500 (ex-showroom TamilNadu)

2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 47 mm X 63.121 mm
Displacement (cc) 109.51 cc
Compression ratio 10.1:1
அதிகபட்ச பவர் 8.67 hp (6.47Kw) at 7500 rpm
அதிகபட்ச டார்க் 9.3 Nm  at 5,500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 4 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் 130 டிரம் mm (CBS)
பின்புறம் 130 mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-18 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 100/80-18 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 2044 mm
அகலம் 736 mm
உயரம் 1,076 mm
வீல்பேஸ் 1,285 mm
இருக்கை உயரம் 790
கிரவுண்ட் கிளியரண்ஸ் 162 mm
எரிபொருள் கொள்ளளவு 9.1 litres
எடை (Kerb) 112kg

ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் நிறங்கள்

கருப்பு நிறத்துடன் சிவப்பு, கருப்பு உடன் நீலம், கருப்பு நிறத்துடன் பச்சை மற்றும் கருப்பு நிறத்துடன் சாம்பல் என நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

2023 Honda CD 110 Dream Deluxe on-Road Price Tamil Nadu

2023 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

2023 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் ஆன்-ரோடு விலை

(on-road price in TamilNadu)

2023 Honda CD 110 Dream Deluxe rivals

இந்திய சந்தையில் கிடைக்கின்ற 110சிசி மாடல்களான ஹீரோ பேஷன் பிளஸ், பேஷன் எக்ஸ்டெக், டிவிஎஸ் ரேடியான, ஸ்டார் சிட்டி உள்ளிட்ட மாடல்களுடன் ஹோண்டா லிவோ ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது

Faqs About Honda CD110 dream deluxe

2023 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் பைக் என்ஜின் விபரம் ?

109.51cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7500rpm-ல் 8.67 hp பவர் மற்றும் 9.30 Nm at 5500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

2023 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் மைலேஜ் விபரம் ?

ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் மைலேஜ் 60Kmpl

2023 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் ஆன்-ரோடு விலை ₹ 90,180

2023 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் போட்டியாளர்கள் ?

ஹீரோ பேஷன் பிளஸ், பேஷன் எக்ஸ்டெக், டிவிஎஸ் ரேடியான, ஸ்டார் சிட்டி மற்றும் ஹோண்டா லிவோ ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது.

2023 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் வாரண்டி விபரம் ?

CD110 ட்ரீம் டீலக்ஸில் HMSI நிறுவனம் சிறப்பு 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பையும் (3 வருட நிலையான + 7 வருட விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.

Honda CD 110 dream deluxe image gallery

 

 

Exit mobile version