Automobile Tamilan

ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

honda activa e electric scooter review

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஆக்டிவா e மாடலின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Honda Activa e

சர்வதேச அளவில் சில நாடுகளில் ஹோண்டா CUV e: என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலின் அடிப்படையில் தான் ஆக்டிவா e வடிவமைக்கப்பட் பேட்டரி ஸ்வாப்பிங் டெக்னாலஜி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த பேட்டரி ஷாப்பிங் டெக்னாலஜி ஆனது ஹோண்டா e: Swap நெட்வொர்க் மூலம் மாற்றிக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது.

மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சம் ஆக்டிவா இ மாடலை பேட்டரி ஸ்வாப் முறையில் மட்டும் சார்ஜ் செய்ய இயலும் மற்றபடி, பிளக் முறையில் சார்ஜ் செய்ய இயலாது.

இரண்டு 1.5Kwh லித்தியம் பேட்டரி ஆனது முழுமையாக சார்ஜ் செய்திருந்தால் அதிகபட்சமாக 102 கிமீ ரேஞ்சு ஆனது ஈக்கோ மோடில் வழங்கலாம். கூடுதலாக இந்த மாடலில் ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 80Km எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் பவர் 6Kw மற்றும் 22 Nm டார்க் வெளிப்படுத்தும்.

இந்தியாவின் அதிகம் விற்பனை ஆகின்ற ஆக்டிவா பிராண்டின் கீழ் வந்துள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அண்ட்ர் போன் ஃபிரேம் கொண்டு 1854x700x1125 பரிமாணங்கள் நீளம் 1,854mm அகலம் 700mm மற்றும் உயரம் 1,125mm, அடுத்து வீல்பேஸ் 1,310mm மற்றும் கெர்ப் எடை வெறும் 119 கிலோ கிராம் கொண்டுள்ள பைக்கில் இருக்கை உயரம் 675mm ஆக உள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்டபிள் ஸ்பீரிங் லோடேட் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, டைமண்ட் கட் அலாய் வீல் அல்லது அலாய் வீல் பெற்று முன்புறத்தில் 160 மிமீ டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் 130 மிமீ டிரம் உடன் வந்துள்ள ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்பக்கம் 90/90-12 மற்றும் 100/80-12 ட்யூப்லெஸ் டயருடன் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பெறுகின்றது.

7 அங்குல TFT திரை பெற்றுள்ள ஆக்டிவா இ ஸ்கூட்டரில்  Honda RoadSync Duo ஸ்மார்ட்போன் மூலம் இணைப்பினை ஏற்படுத்தி ரைடிங் முறைகள், ரிவர்ஸ் மோட், சைட் ஸ்டாண்ட் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட், நேவிகேஷன், லைவ் டிராக்கிங், பராமரிப்பு அலர்ட் OTA உள்ளிட்ட அம்சங்களை பெறும் நிலையில், பேஸ் வேரியண்டில் 5 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்று அடிப்படையான வசதிகளை பெறுகின்றது.

ICE ஆக்டிவா மாடலில் உள்ளதை போன்றே ஸ்மார்ட் கீ வழங்கப்பட்டு அது சார்ந்த வசதிகளை பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் மாடலுக்கு 3 ஆண்டுகள்/ 50,000 கிமீ (எது முதலில் வருகிறதோ அதுவரை வாரண்டி வழங்கப்படுகின்றது.

பேட்டரி ஸ்வாப் முறையில் வழங்கப்படும் என்பதனால் இதற்கான தனியான கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. அதன் விபரம் ஜனவரி மாதம் தெரியவரும். முதற்கட்டமாக பெங்களூரு, மும்பை, டெல்லியில் மட்டும் கிடைக்க உள்ளது.

ஹோண்டா ஆக்டிவா இ நுட்பவிபரங்கள்

Honda Activa e: specs                                                  Honda RoadSync Duo/Standard
வகை எலெக்ட்ரிக்
மோட்டார் வகை PMSM மோட்டார்
பேட்டரி 2×1.5Kwh Lithium ion, Swappable
அதிகபட்ச வேகம் 80 Km/h
அதிகபட்ச பவர் 6 KW Nominal
அதிகபட்ச டார்க் 22 Nm
அதிகபட்ச ரேஞ்சு 102Km/ charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம் Battery swap station option only
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Econ, Standard & Sports
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் டூயல் ஷாக்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 160 mm
பின்புறம் டிரம் 130 mm (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை டைமண்ட் கட் அலாய்/ பிளாக் அலாய்
முன்புற டயர்  90/90-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர்  100/80-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை Swappable
கிளஸ்ட்டர் 7 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர்/5 இஞ்ச் TFT
பரிமாணங்கள்
நீளம் 1854 mm
அகலம் 700 mm
உயரம் 1125 mm
வீல்பேஸ் 1310 mm
இருக்கை உயரம் 675 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 171 mm
பூட் கொள்ளளவு 0.5 Liter
எடை (Kerb) 119 kg/118 kg

ஹோண்டாவின் ஆக்டிவா எலெக்ட்ரிக் நிறங்கள்

பேர்ல் ஷாலோ நீலம், பேர்ல் மிஸ்டி வெள்ளை, பேர்ல் செரினிட்டி நீலம், மேட் ஃபோகி சில்வர் மெட்டாலிக், மற்றும் பேர்ல் இக்னியஸ்  என 5 விதமான நிறங்களை பெறுகின்றது.

Honda Activa e on-Road Price in Tamil Nadu

2024 ஹோண்டா ஆக்டிவா e ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்

Honda Activa e Rivals

இந்திய சந்தையில் கிடைக்கின்ற பேட்டரி ஸ்வாப் மாடல்களான ஹீரோ வீடா வி1, பவுன்ஸ் இன்ஃபினிட்டி  உட்பட புதிதாக வந்த ஓலா S1Z ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.

Faq ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

activa e பவர் மற்றும் டார்க் விபரம் ?

ஆக்டிவா e ஸ்கூட்டரின் பவர் 6Kw மற்றும் 22 Nm டார்க் வெளிப்படுத்துகி்ன்றது.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் மைலேஜ் எவ்வளவு ?

முழுமையான சிங்கிள் பேட்டரி ஸ்வாப்பில் 102 கிமீ வரை ரேஞ்சு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் 75-85 கிமீ கிடைக்கலாம்.

ஹோண்டா ஆக்டிவா இ மாடலை சார்ஜ் செய்ய முடியுமா ?

ஹோண்டாவின் e Swap நெட்வொர்க் மையங்களில் மட்டுமே பேட்டரியை மாற்றிக் கொள்ள முடியும், சார்ஜ் செய்ய இயலாது.

ஹோண்டா ஆக்டிவா e ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஆக்டிவா e ஆன்-ரோடு விலை ரூ.1.28 லட்சம் முதல் ரூ. 1.64 லட்சம் வரை அமைந்துள்ளது.

2025 Honda Activa e scooter Image Gallery

Honda activa e Brochure images

 

Exit mobile version