Automobile Tamilan

ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

 

honda sp160 bike on-road price

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய எஸ்பி 160 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2023 Honda SP 160

விற்பனையில் கிடைத்து வந்த எக்ஸ்பிளேடு நீக்கப்பட்டு வந்துள்ள புதிய SP160 பைக் மாடலானது முன்பாக விற்பனையில் உள்ள 125சிசி எஸ்பி 125 பைக்கின் வடிவமைப்பினை பின்பற்றி யூனிகார்ன் 160 பைக்கின் என்ஜின் மற்றும் ஃபிரேம் உள்ளிட்ட அம்சங்களை பகிர்ந்து கொண்டு ஸ்போர்ட்டிவான தோற்ற வடிவமைப்பினை கொண்டுள்ளது.

யூனிகார்ன் 160 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13.5 hp பவர், 14.6 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

17 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக இரு விதமான வேரியண்ட் கொண்டுள்ளது.

எஸ்பி125 மாடலை போன்ற எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில்லைட் பெற்றதாக எஸ்பி 160 விளங்குகிறது. முன்பக்கத்தில் 80/100-17M/C 46P மற்றும் பின்புறத்தில் 130/70-17M/C 62P டயர் பெற்றுள்ளது.

2023 எஸ்பி 160 பைக் மாடலின் பரிமாணங்கள் 2,061 மிமீ நீளம், 786 மிமீ அகலம் மற்றும் 1,113 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,347 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 796 மிமீ மற்றும் 177 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர் மற்றும் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் கூடுதலாக, எரிபொருள் இருப்பினை கொண்டு பயணிக்கின்ற தொலைவு மற்றும் எரிபொருள் நுகர்வு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2023 ஹோண்டா எஸ்பி160 பைக்கின் விலை

SP160 Single Disc – ₹.1,17,500

SP160 Dual Disc – ₹ 1,21,900

(எக்ஸ்-ஷோரூம் ) தமிழ்நாட்டின் விலை

ஹோண்டா எஸ்பி 160 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 57.300 mm x 63.096 mm
Displacement (cc) 162.71 cc
Compression ratio 10:01
அதிகபட்ச பவர் 13.27 hp (9.9Kw) at 7500 rpm
அதிகபட்ச டார்க் 14.58 Nm  at 5500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 276 mm (ABS)
பின்புறம் டிஸ்க் 220 mm / 130 mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-17M/C 46P ட்யூப்லெஸ்
பின்புற டயர் 130/70-17M/C 62P ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 2061 mm
அகலம் 766 mm
உயரம் 1113 mm
வீல்பேஸ் 1347 mm
இருக்கை உயரம் 796 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 177 mm
எரிபொருள் கொள்ளளவு 12 litres
எடை (Kerb) 139 kg (Drum) / 141 Kg (Disc)

 

ஹோண்டா எஸ்பி 160 நிறங்கள்

ஹோண்டாவின் எஸ்பி160 மாடலில் மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் டார்க் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் ஸ்பார்டன் ரெட், பேர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் பேர்ல் கிரவுண்ட் கிரே என 6 விதமான நிறங்கள் பெற்றுள்ளது.

Honda SP 160 on-Road Price Tamil Nadu

2023 ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

SP160 Single Disc – ₹.1,41,150

SP160 Dual Disc – ₹ 1,47,105

2023 Honda SP160 Rivals

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற யமஹா FZS-Fi V4 Dlx, சுசூகி ஜிக்ஸர், பல்சர் P150, பல்சர் N160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி, மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.

Faqs About Honda SP 160 Bike

ஹோண்டா SP 160 பைக்கின் என்ஜின் விபரம் ?

162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13.5 hp பவர், 14.6 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் SP160 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

2023 ஹோண்டா SP160 பைக்கின் மைலேஜ் 48 கிமீ வழங்கலாம்.

ஹோண்டா SP160 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

ஹோண்டா எஸ்பி 160 போட்டியாளர்கள் யமஹா FZS-Fi V4 Dlx, சுசூகி ஜிக்ஸர், பல்சர் P150, பல்சர் N160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி, மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி

ஹோண்டா SP 160 பைக்கின் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

தமிழ்நாட்டின் விலை அறிவிக்கப்படாத காரணத்தால் தோராயமான விலை குறிப்பிடப்பட்டுள்ளது.
SP160 Single Disc - ₹.1,41,150
SP160 Dual Disc - ₹ 1,47,105

ஹோண்டாவின் எஸ்பி 160 பைக்கின் வேரியண்ட் விபரம் ?

இருபக்க டயர்களிலும் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் கொண்ட குறைந்த விலை வேரியண்ட் என ஹோண்டா SP 160 பைக் பெற்றுள்ளது.

2023 Honda SP 160 Bike Image Gallery

 

Exit mobile version