க்விட் 1.0 லிட்டர் காரின் வேரியண்ட் மற்றும் வசதிகள்

மிகுந்த சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ள ரெனோ க்விட் 1 லிட்டர் கார் மாடலில் உள்ள வேரியண்ட்கள் மற்றும் வசதிகள் போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். க்விட் 1.0 லிட்டர் காருக்கு முன்பதிவு நடந்து வருகின்றது.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe ( Smart Control efficiency- SCe) பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி SCe மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

க்விட் 1.0 அளவுகள்

  • நீளம்: 3,679 மிமீ
  • அகலம்: 1,579 மிமீ
  • உயரம்: 1,478 மிமீ
  • வீல்பேஸ்: 2,423 மிமீ
  • கிரவுண்ட் கிளியரன்ஸ்: 180 மிமீ
  • எரிபெருள் கலன்: 28 லிட்டர்

RXT மற்றும் RXT (O) என இரண்டு டாப் வேரியண்ட்களில் மட்டுமே இடம்பெற்றுள்ள 1.0லிட்டர் மாடலில் பல வசதிகள் உள்ளன.  RXT (O) வேரியண்டில் மட்டுமே ஓட்டுநர் பக்க காற்றுப்பை மற்றும் பாதுகாப்பான புரோ-சென்ஸ் இருக்கை பட்டை இடம்பெற்றுள்ளது.

மற்ற வசதிகள்

7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷன்

பூளூடுத் , யூஎஸ்பி மற்றும் ஆக்ஸ் ஆதரவு

டியூவல் டோன் டேஸ்போர்டு

பாடிகலர் பம்பர்

ரிமோட் கிலெஸ் என்ட்ரி  மற்றும் சென்டர் லாக்கிங்

முன்பக்க கதவுகளுக்கு

பவர் விண்டோஸ்

முன்பக்க கதவில் 2 ஸ்பிக்கர்கள்

ரியர் பார்சல் டிரே

முன்பக்க பனி விளக்குகள்

12V பவர் சாகெட்

800சிசி மற்றும் 1.0 லிட்டர் மாடலுக்கு வித்தியாசத்தை தரும் வகையிலான கருப்பு வெள்ளை கலந்த பாடி ஸ்டிக்கரிங் மற்றும் ஓஆர்விஎம் மேல் கிளாஸ் கிரே நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.

ரெனோ க்விட் 1.0L விலை விபரம்

Kwid 1.0L RXT – ரூ.3.82,776

Kwid 1.0L RXT (O) – ரூ.3.95,776

( டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

 

Share