புதிய பொலிவு பெற்ற டாடா கார்கள்

டாடா மோட்டார்ஸ் ஒரே நாளில் 5 மேம்படுத்தபட்ட கார்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் 3 சிஎன்ஜி மாடல்களும் வெளிவந்துள்ளது.  இவை அனைத்து மாடல்களும் அடுத்த மாதம் முதல் கிடைக்கும்.
நானோ இன்டிகோ இசிஎஸ், இன்டிகா, சுமோ கோல்டு, சஃபாரி ஸ்ட்ராம், என 5 மாடல்களின் மேம்படுத்தப்பட்டவை விற்பனைக்கு வந்துள்ளது.
மேலும் நானோ, இன்டிகோ, இன்டிகா என மூன்று மாடல்களிலும் சிஎன்ஜியில் வெளிவந்துள்ளது. 
2013 டாடா நானோ
டாடா நானோ 2013 மாடலின் புதிய வசதிகள் கீலெஸ் என்ட்ரி, டிவின் குளோவ் பாக்ஸ், 4 ஸ்பீக்கர் ஆம்பிஸ்டீரீம் ஆடியோ அமைப்புடன் பூளுடூத் இனைப்பு, என பல வசதிகள் இனைக்கப்பட்டுள்ளது.
டாடா சுமோ கோல்டு
சுமோ கோல்டு எஸ்யூவி காரில் பூளூடூத், டூவல் ஏசி, யூஎஸ்பி தொடர்பு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.
சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்புளோரர்
சஃபாரி ஸ்ட்ராம் காரை சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்புளோரர் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டபுள் டின் தொடுதிரை தகவல் அமைப்பு, நட்ஜ் கார்டு, டோர் வைசர்கள், எக்ஸ்ப்ளோரர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டிக்கெல்களுடன் வந்துள்ளது.
இன்டிகோ இசிஎஸ்

இன்டிகோ இசிஎஸ் உட்ப்புற கட்டமைப்பு மற்றும் வெளிப்புற கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முகப்பு விளக்குகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இன்டிகா

இன்டிகா காரில் புதிய முகப்பு விளக்குகள், குரோம் கிரில், டூயல் டோன் உட்ப்புறம், ஸ்மார்ட் ஷிப்ட் கியர் நுட்பம் கொண்ட டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.
Exit mobile version