Site icon Automobile Tamilan

மினி கன்வெர்ட்டிபிள் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் புதிய மினி கன்வெர்ட்டிபிள் கார் ரூ.34.90 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  கன்வெர்ட்டிபிள் காரில் எலக்ட்ரிக் மூலம் இயங்கும் சாஃப்ட் டாப் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வந்துள்ள மூன்றாவது தலைமுறை கன்வெர்ட்டிபிள் கார் புதிய UKL தளத்தில் கூடுதலான வசதிகள் மற்றும் இடவசதி கொண்டதாகவும் எலக்ட்ரிக் முறையில் இயங்கும் ஃபேபரிக் சாஃப்ட் டாப் 30 கிமீ வேகத்தில் 18 விநாடிகளில் விரிவடையும்.

189 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ட்வீன்பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 280 Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டிமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

2016 மினி கன்வெர்ட்டிபிள் காரின் உச்ச வேகம் மணிக்கு 233 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 7.1 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

மிகவும் ஸ்டைலிசான கன்வெர்ட்டிபிள் காரில் பல தரப்பட்ட பாதுகாப்பு வசதிகள் உருளும் நிலையை தடுக்கும் சென்ஸார்கள் , ஏபிஎஸ் டிராக்‌ஷன் கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் , ஹார்மன் ஹை-ஃபை சிஸ்டம் , மினி ஹெட் அப் டிஸ்பிளே , 8.8 இஞ்ச் அகலம் கொண்டு தொடுதிரை அமைப்பு என பலவற்றை ப்ற்றுள்ளது.

முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டும் மினி கன்வெர்ட்டிபிள் கார் விலை ரூ. 34.90 லட்சம் ( எக்ஸ்ஷோரூம் இந்தியா )

Exit mobile version