Automobile Tamilan

டாடா போல்ட் கார் முன்னோட்டம்

டாடா நிறுவனத்தின் புதிய பாதைக்கு  அடிப்படையாக அமைய உள்ள டாடா போல்ட் காரின் சிறப்புகள் மற்றும் தனித்தன்மையை கானலாம்.

டாடா நிறுவனத்தின் கார் விற்பனை சற்று சரிவினை கண்டு வந்த நிலையில் ஜெஸ்ட் செடான் காரின் அறிமுகத்தின் மூலம் ஈடுகட்டி வருகின்றது. ஜெஸ்ட் செடான் காரின் அடிப்படையாக கொண்ட போல்ட் ஹேட்ச்பேக் கார் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. போல்ட் காரின் வரவு மாருதி ஸ்விஃப்ட், போலோ, புன்டோ எவோ, கிரான்ட் ஐ 10 போன்ற கார்களுக்கு நேரடியான சவாலினை தரவுள்ளது.

Tata bolt

போல்ட் எஞ்சின்

போல்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும்.
1.2 லிட்டர் ரெவட்ரான் ட்ர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 90பிஎஸ் மற்றும் டார்க் 140என்எம் ஆகும்.  5 ஸ்பீடு மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இவற்றில் மூன்று விதமான டிரைவிங்கினை  பெற்றுள்ளது. அவை ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகும்.

 1.3 லிட்டர் குவாட்ராஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 75பிஎஸ் மற்றும் டார்க் 190என்எம் ஆகும்.  5 ஸ்பீடு மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

ஜெஸ்ட் காரினை போல ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வருவதற்க்கான உறுதியான தகவல்கள் இல்லை.

போல்ட் சிறப்பம்சங்கள்

போல்ட் காரில் பல நவீன வசதிகளை கொண்டுள்ளது. அவை கியர் ஸ்ஃப்ட் இன்டிக்கேட்ர், புராஜெக்டர் முகப்பு விளக்குகள், பனி விளக்குகள், இருக்கை பெல்ட் அனிவதற்க்கான நினைவூட்டல், 8 ஸ்பிக்கர்கள், ஆன்டார்ய்டினை அடிப்படையாக கொண்ட நேவிகேஷன் அமைப்பு, தொடுதிரை தகவல் அமைப்பு, பூளுடுத், யூஎஸ்பி, போன்றவை உள்ளன.

பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு

டாப் மாடலில் பல்வகை பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. அவை இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, சிஎஸ்சி, 3.புள்ளி இருக்கை பெல்ட் போன்றவை உள்ளன. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்கின் கொண்டிருக்கும்.

போல்ட் காரின் நீளம் 3825மிமீ, அகலம் 1695மிமீ மற்றும் உயரம் 1562மிமீ ஆகும். வீல்பேஸ் 2470மிமீ மற்றும் கிரவுன்ட் கிளியரன்ஸ் 165மிமீ ஆகும். 15இன்ச் ஆலாய் வீல் பெற்றுள்ளது. இதன் பூட் 210லிட்டர் ஆகும்.

மிக பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள டாடா போல்ட் கார் 2015 ஆம் ஆண்டில் வெளிவரும்.

Exit mobile version