ADAS நுட்பத்துடன் 2024 கியா சொனெட் எஸ்யூவி அறிமுகமானது

kia sonet suv

கியா இந்தியா வெளியிட்டடுள்ள புதிய சொனெட் எஸ்யூவி 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு ஜனவரி மாதம் வெளியிடப்பட உள்ளது. வரும் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

கியா சொனெட் எஸ்யூவி காரில் டெக் லைன், ஜிடி லைன் மற்றும் X-Line என மூன்று விதமான அடிப்படையில்  HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய 7 வேரியண்டுகளில் வரவுள்ளது.

2024 Kia Sonet Facelift

மிக நேர்த்தியான 2024 கியா சொனெட் காரின் முன்பக்க கிரில் அமைப்பு மற்றும் பம்பர் உள்ளிட்ட மாறுபட்ட அம்சங்களை கொண்டதாக அமைந்திருக்கின்றது. பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட 16 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. பின்புறத்தில் புதிய பம்பர்,  எல்இடி லைட் பார் கொண்டு எல்இடி டெயில் லைட் பெற்றுள்ளது.

இன்டிரியரில் புதிய 10.25 இன்ச் கிளஸ்ட்டர், மின்சார சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள், OTA புதுப்பிப்புகள், 70க்கு மேற்பட்ட கியா கனெக்ட் வசதி, 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் இணைப்பு, ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், மற்றும் போஸ் நிறுவன ஏழு ஸ்பீக்கர் சிஸ்டம் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

2024 கியா சொனெட் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று என்ஜின்களும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. எனவே, 82 hp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல் கொடுக்கப்பட்டுள்ளது.

118 hp பவர் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கும். இறுதியாக, 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் வரவுள்ளது.

சொனெட்டில் மொத்தம் 11 விதமான வண்ண விருப்பங்களில் வழங்கப்பட உள்ள நிலையில் புதிய பிவட்ர் ஆலிவ் முதலில் செல்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. வேரியண்ட்டை பொறுத்து, சோனெட் மூன்று விதமான வடிவமைப்பினை பெற்ற புதிய 16-இன்ச் அலாய் வீல் வடிவமைப்புகளின் விருப்பத்தைப் பெற உள்ளது.

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் கியா சொனெட் எஸ்யூவி காரில் முன்பக்க இரட்டை ஏர்பேக், முன் இருக்கை பக்க ஏர்பேக் மற்றும் பக்கவாட்டில் திரை ஏர்பேக்குகள் பெற்றுள்ளது.  இபிடி உடன் ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக் ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்- அசிஸ்ட் கன்ட்ரோல் தொடங்கவும், பின்புற பார்க்கிங் சென்சார்கள், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டயர் பிரஷர் மானிட்டர், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், ஆட்டோ டோர், முன் மற்றும் பின் அனைத்து இருக்கை 3-புள்ளி இருக்கை பெல்ட்கள்  மற்றும் சீட்பெல்ட் நினைவூட்டல் பெற்றுள்ளது.

Kia Sonet Level 1 ADAS

முதல்நிலை ADAS பாதுகாப்பில் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும் முன்னோக்கி மோதல் தவிர்க்க உதவும் வகையில் கார்/ பாதசாரி/ சைக்கிள் ஓட்டுபவர், லேன் கீப் அசிஸ்ட் • லேன் ஃபாலோ அசிஸ்ட், லேன் புறப்பாடு எச்சரிக்கை, ஹை பீம் அசிஸ்ட், ஓட்டுனர் கவன குறைவை எச்சரிக்கை,  வாகனம் புறப்படும் எச்சரிக்கை ஆகியவற்றை பெற்றுள்ளது.

2024 கியா சொனெட் மாடலுக்கு முன்பதிவு டிசம்பர் 20 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் விலை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம்.