Automobile Tamilan

புதிய டிசையர், ஸ்விஃப்டில் மாருதி சுசூகி தர உள்ள வசதிகள் என்ன..!

2024 மாருதி ஸ்விஃப்ட் கார்

புதுப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய இரு மாடல்களும் பெற உள்ள சில முக்கிய அம்சங்களை பற்றி தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

குறிப்பாக ஜப்பானில் வெளியிடப்பட்ட புதிய சுசூகி ஸ்விஃப்ட்டில் எஞ்சின் உட்பட இன்டிரியரில் பல்வேறு மேம்பாடுகள்  கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இந்திய சந்தையில் அதிகரித்து வரும் போட்டியாளர்களின் வசதிகள் மாறுபட்ட சந்தையின் சூழலுக்கு ஏற்ப உறுதியான பாதுகாப்பு கட்டுமானம் மற்றும் நவீன வசதிகள் பெற்றிருக்கலாம்.

புதிய எஞ்சின்

ஸ்விஃப்ட்டின் அடிப்படையிலான செடான் ரக டிசையரும் புதிய 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை பகிர்ந்து கொள்ள உள்ளன. 82hp மற்றும் 108Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில்  5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற உள்ளது. சர்வதேச அளவில் ஹைபிரிட் பெற்றிருந்தாலும் இந்த வருடம் ஹைபிரிட் பெற வாய்ப்பில்லை.

இன்டிரியர் வசதிகள்

இன்டிரியரில் தற்பொழுது உள்ள 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நீக்கப்பட்டு புதிய 9 அங்குல தொடுதிரை ஃப்ரீஸ்டாண்டிங் சிஸ்டத்தில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் பல்வேறு சுசூகி கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளும் இடம்பெற உள்ளது.

பல்வேறு ஸ்மார்ட்போன் சார்ந்த இணைப்புகளுடன் வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஹெட்அப் டிஸ்பிளே மூலம் வேகம் , நேவிகேஷன் உள்ளிட்ட விபரங்களை திரையில் காணலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்

இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள பாரத் NCAP விதிமுறைகளுக்கு உட்பட்ட உறுதியான கட்டுமானத்தை பெறுவதுடன் 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்டிலும் கொடுக்கப்படுவதுடன், ஏபிஎஸ், இபிடி உட்பட 360 டிகிரி கேமரா வழங்கப்படலாம். இந்த கேமரா உதவியுடன் இலகுவாக பார்க்கிங் செய்யலாம்.

எப்பொழுது அறிமுகம்

புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட், டிசையர் என இரு மாடல்களும் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கின் விற்பனை ஏப்ரல் அல்லது மே மாதம் துவங்கப்படலாம். அதனை தொடர்ந்து டிசையர் பண்டிகை காலத்துக்கு முன்பாக விற்பனைக்கு துவங்கலாம்.

Exit mobile version