இந்திய சந்தையில் தயாரிக்கப்படுகின்ற புதிய கார்களை மதிப்பாய்வு செய்து காரின் கட்டுமானத் தரத்தை நட்சத்திர மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்க பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (BNCAP) துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன உற்பத்தியாளர்கள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது மதிப்பினை பெறும்.
BNCAP சோதனை ஆக்டோபர் 1 முதல் துவங்க உள்ள நிலையில் தற்பொழுது 30க்கு மேற்பட்ட கார் மாடல்களை கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்த OEM தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Bharat NCAP (BNCAP) ratings
பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (BNCAP) வாகன தரத்தை சோதனை திட்டம் முன்பே அறிவித்தப்படி, BNCAP ஆனது அக்டோபர் 1, 2023 முதல் செயல்பட உள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) இறுதி கட்ட ஆலோசனைகள் முடிந்துவிட்டதாகவும், BNCAP முழுமையான செயல்படுத்துவதற்குத் தேவையான பெரும்பாலான கூறுகள் உள்ளன அவற்றை உறுதிப்படுத்தியுள்ளது.
30 க்கும் மேற்பட்ட மாடல்கள் ஏற்கனவே அந்தந்த உற்பத்தியாளர்களால் BNCAP சோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, உற்பத்தியாளர்களின் பெயரை குறிப்பிடாமல் கூறினார்.
BNCAP சோதனை நெறிமுறை குளோபல் NCAP மற்றும் யூரோ NCAP போன்ற சோதனை முறைகளின் அடிப்படையை பெற்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை செய்யப்படுகின்ற வாகனங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நட்சத்திரம் முதல் அதிகபட்சம் ஐந்து நட்சத்திரம் வரை நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்படும்.
அனைத்து வாகனங்களும் மூன்று வகையான பாதுகாப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. அவை வயது வந்தோருக்கான பாதுகாப்பு, குழந்தை பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்களின் அடிப்படையில் பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டு வரையறுக்கப்படுகின்றது.
BNCAP Crash Test
8 பயணிகள் மற்றும் 3.5 டன் எடைக்கு உட்பட்ட வாகனங்கள் நிறுவனங்களாக விருப்பத்துடன் வழங்கும் பொழுது நேரடியாக டீலர்களிடம் இருந்து பெற்று சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
கிராஷ் டெஸ்ட் சோதனைகளில் முன்பக்க மோதல் சோதனை (மணிக்கு 64 கிமீ வேகத்தில் ஆஃப்செட் டிஃபார்மபிள் தடையில் வாகனத்தை மோதச் செய்தல்), பக்க தாக்க சோதனை ( மணிக்கு 50 கிமீ வேகத்தில் நடத்தப்படும்) மற்றும் போல் பக்க வாட்டு மோதல் சோதனை (மதிப்பீடு பெற வாகனங்கள் கட்டாயம்) ஆகியவை அடங்கும்.
முழு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுவதற்கு, வாகனம் குறைந்தபட்சம் 27 புள்ளிகள் வயது வந்தோருக்கான பாதுகாப்பில் பெற்றிருக்க வேண்டும். அடுத்தப்படியாக, 41 புள்ளிகள் குழந்தைகளின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
360-டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக்கிங், லேன் புறப்படும் எச்சரிக்கை போன்ற செயலில் உள்ள பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய BNCAP எதிர்காலத்தில் இவற்றை சோதனை செய்யும் வசதிகளை ஏற்படுத்த உள்ளது. எதிர்காலத்தில், BNCAP ஆனது மின்சார வாகனம் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களையும் சோதனைக்கு உள்ளடக்கியதாக பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த உள்ளது.
மின்சாதங்களில் உள்ளதை போன்றே கார்களில் BNCAP லோகோ மற்றும் அதன் மதிப்பீட்டைக் குறிக்கும் ஸ்டிக்கர் மூலம் சோதிக்கப்பட்ட முடிவுகளை OEM நிறுவனங்கள் குறிப்பிடலாம்.