Automobile Tamilan

அறிமுகத்திற்கு முன்பாக 2024 Maruti Suzuki Swift முன்பதிவு துவங்கியதா..?

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ஹேட்ச்பேக் ரக மாடலான 2024 மாருதி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) விற்பனைக்கு மே மாதம் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் சில டீலர்களிடம் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

முந்தைய 1.2 லிட்டர் K12B 4 சிலிண்டர் என்ஜினுக்கு பதிலாக, மாருதியின் ஸ்விஃப்ட் காரில் புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 82 bhp மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம்.

maruti swift car 2024 model

புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள மிக உறுதியான கட்டுமானத்தை கொண்டிருக்கும் ‘HEARTECT’ பிளாட்ஃபாரத்தில் வந்துள்ள ஸ்விஃப்டில் ஆறு ஏர்பேக்குகள் ஏபிஎஸ் உட்பட இபிடி,  எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 3 புள்ளி கொண்ட சீட் பெல்ட் பெற்றிருக்கும். சர்வதேச அளவில் கூடுதலாக ADAS உள்ள நிலையில், இந்திய சந்தையில் பெறுமா என எந்த உறுதியான தகவலும் இல்லை.

இன்டிரியரில் இந்த காரில் 9 அங்குல தொடுதிரை ஃப்ரீஸ்டாண்டிங் சிஸ்டத்தில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் பல்வேறு சுசூகி கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளும் இடம்பெற உள்ளது.

அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்கப்படாத நிலையில் ஒரு சில டீலர்கள் ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவை துவங்கியுள்ளனர். ரூ.11,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. மேலும் விபரங்கள் மே மாதம் வெளியாகலாம்.

Exit mobile version