Automobile Tamilan

இந்தியா வரவிருக்கும் ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம்

renault duster suv

ரெனால்ட் அறிமுகம் செய்துள்ள புதிய டஸ்ட்டர் எஸ்யூவி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட டேசியா டஸ்ட்டர் மாடலை அடிப்படையாக கொண்டு மேம்பட்ட வசதிகளுடன் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்பாக விற்பனையில் நடுத்தர எஸ்யூவி பிரவில் கிடைத்து வந்த டஸ்ட்டர் அமோக ஆதரவினை பெற்றிருந்தாலும் தொடர்ந்து இந்திய சந்தையில் ரெனால்ட் மேம்படுத்த தவறியதால் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. மீண்டும் டஸ்ட்டரின் வருகையை ரெனால்ட் உறுதி செய்திருந்த நிலையில் டேசியா டஸ்ட்டரை தொடர்ந்து ரெனால்ட்டின் மாடல் வெளியாகியுள்ளது.

வழக்கமான ரெனால்ட் பயன்படுத்தி வந்த லோகோவிற்கு பதிலாக 2025 ஆம் ஆண்டு மாடலில் RENAULT என ஆங்கிலத்தில் பெரிய எழுத்துரு மூலம் வழங்கப்பட்டு, மிக அகலமான முன்புற ஏர்டேம் இன்டேக் வசதி, மாறுபட்ட பம்பர் என முன்புற அமைப்பில் கொண்டு தொடர்ந்து புதிய மாடலும் CMF-B பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பெரிய 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீலுடன் நேர்த்தியான ஸ்டைலிங் கோடுகளை பெற்றதாகவும், பின்புறத்தில் Y  வடிவ எல்இடி டெயில் லைட் பெற்று நேர்த்தியான பம்பரை கொண்டுள்ளது.

இண்டிரியர் வசதிகளை பொறுத்துவரை, ஸ்டைலிஷான மேம்பாடுகளை கொண்டுள்ள டேஸ்போர்டில்  7-இன்ச் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் அம்சங்களை வழங்க 10.1-இன்ச் தொடுதிரை பெற்றுள்ளது. மத்தியில் ஏசி வென்ட்களுக்கு கீழே உள்ள கிடைமட்ட பேனலில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் எச்விஏசி சிஸ்டத்தைக் கட்டுப்படுத்தும் பொத்தான்கள் உள்ளன.

இந்த மாடலில் வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய Arkamys 3D சவுண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

2025 ரெனால்ட் டஸ்ட்டர் பற்றி முக்கிய குறிப்புகள்:

டஸ்ட்டரில் உள்ள என்ஜின் விபரம்: 120hp, 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 140hp, 1.2-லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் மற்றும் 170hp, 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆதரவான என்ஜினாக உள்ளது. ஒரு சில நாடுகளை பொறுத்து என்ஜின் தேர்வு மாறுபடும் இந்திய சந்தைக்கான என்ஜின் பற்றி உறுதியாக தகவல் தற்பொழுது இல்லை.

உயர் தர ADAS பாதுகாப்பு தொகுப்பு: இரண்டாம் நிலை ADAS தொகுப்பிற்கு ஏற்ற அவசரகால ஆட்டோ பிரேக்கிங் ஆனது வாகனம், பாதசாரி, சைக்கிள் ஓட்டுபவர், மோட்டார் சைக்கிளுக்கும் வழங்குகின்றது. அடுத்து, எச்சரிக்கையுடன் போக்குவரத்து குறீயிட்டை அறிதல், பின்புற பார்க்கிங் சென்சார், லேன் மாறுதல் எச்சரிக்கை மற்றும் உதவி, பிளைன்ட் வியூ உதவி என பல்வேறு அம்சங்களை பெறுகின்றது.

ரெனால்ட் டஸ்ட்டர் இந்திய அறிமுக விபரம்: ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற 4×2 மற்றும் 4×4 என இருவிதமான டிரைவ் ஆப்ஷனை பெற உள்ள விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும்.

டஸ்ட்டர் போட்டியாளர்கள் யார்: ஹூண்டய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், டாடா கர்வ், மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றை டஸ்ட்டர் எஸ்யூவி எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version