Automobile Tamilan

2026 மஹிந்திரா பொலிரோ நியோ என்ன எதிர்பார்க்கலாம்.!

mahindra bolero neo spied 1

வரும் ஆகஸ்ட் 15, 2025ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மஹிந்திரா பொலிரோ நியோ மேம்படுத்தப்பட்ட மாடாலாக முற்றிலும் புதிதான வடிவமைப்பினை பின்பற்றி  நவீன வசதிகள் உட்பட ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சங்களையும் பெறலாம் என கூறப்படுகின்றது.

முன்பாக டியூவி300 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு தற்பொழுது பொலிரோ நியோ என கிடைக்கின்ற இந்த எம்பிவி ரக மாடலில் மிக தாராளமான இடவசதியுடன் கொண்ட இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது.

டெஸ்டிங்கில் உள்ள மாடலின் கிரில் அமைப்பு பம்பர் உள்ளிட்டவை மாறுபட்டதாக தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற தார் ராக்ஸ் தழுவியதாக இருக்கலாம், மேலும், எல்இடி ரிங் உடன் கூடிய வட்ட வடிவ முகப்பு விளக்கினை சோதனை ஓட்ட மாடல் பெற்று பக்கவாட்டில் உள்ள சி பில்லர் பகுதியில் சிறிய மாற்றங்கள் , பின்புறத்திலும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் உடன் பின்புறத்தில் ஸ்பேர் வீல் வைப்பதற்கான இடத்தை கொண்டுள்ளது.

இன்டீரியர் தொடர்பான படங்கள் கிடைக்கவில்லை என்றாலும், சமீபத்தில் வந்த மற்ற மஹிந்திரா கார்களில் இருந்து பெறப்பட்ட கிளஸ்ட்டருடன் கூடுதலாக பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்டவற்றை பெறக்கூடும். கூடுதலாக டாப் வேரியண்டில் ADAS level-2 பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது இடம் பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து வழங்கப்பட்டு 100hp மற்றும் 260Nm டார்க் வெளிப்படுத்தும், இதில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ள நிலையில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version