Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2026 மஹிந்திரா பொலிரோ நியோ என்ன எதிர்பார்க்கலாம்.!

by நிவின் கார்த்தி
18 June 2025, 3:25 pm
in Car News
0
ShareTweetSend

mahindra bolero neo spied 1

வரும் ஆகஸ்ட் 15, 2025ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மஹிந்திரா பொலிரோ நியோ மேம்படுத்தப்பட்ட மாடாலாக முற்றிலும் புதிதான வடிவமைப்பினை பின்பற்றி  நவீன வசதிகள் உட்பட ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சங்களையும் பெறலாம் என கூறப்படுகின்றது.

முன்பாக டியூவி300 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு தற்பொழுது பொலிரோ நியோ என கிடைக்கின்ற இந்த எம்பிவி ரக மாடலில் மிக தாராளமான இடவசதியுடன் கொண்ட இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது.

டெஸ்டிங்கில் உள்ள மாடலின் கிரில் அமைப்பு பம்பர் உள்ளிட்டவை மாறுபட்டதாக தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற தார் ராக்ஸ் தழுவியதாக இருக்கலாம், மேலும், எல்இடி ரிங் உடன் கூடிய வட்ட வடிவ முகப்பு விளக்கினை சோதனை ஓட்ட மாடல் பெற்று பக்கவாட்டில் உள்ள சி பில்லர் பகுதியில் சிறிய மாற்றங்கள் , பின்புறத்திலும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் உடன் பின்புறத்தில் ஸ்பேர் வீல் வைப்பதற்கான இடத்தை கொண்டுள்ளது.

இன்டீரியர் தொடர்பான படங்கள் கிடைக்கவில்லை என்றாலும், சமீபத்தில் வந்த மற்ற மஹிந்திரா கார்களில் இருந்து பெறப்பட்ட கிளஸ்ட்டருடன் கூடுதலாக பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்டவற்றை பெறக்கூடும். கூடுதலாக டாப் வேரியண்டில் ADAS level-2 பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது இடம் பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து வழங்கப்பட்டு 100hp மற்றும் 260Nm டார்க் வெளிப்படுத்தும், இதில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ள நிலையில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

mahindra bolero neo spied

Related Motor News

2025 மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம்

பொலிரோ, பொலிரோ நியோ என இரண்டிலும் போல்டு எடிசனை வெளியிட்ட மஹிந்திரா

ரூ.25,000 வரை மஹிந்திராவின் எஸ்யூவி விலை உயர்ந்தது

மஹிந்திரா Bolero Neo Plus சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்

9 சீட்டர் மஹிந்திரா பொலிரோ நியோ+ விற்பனைக்கு அறிமுகமானது

Tags: Mahindra Bolero neo
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

வெனியூ எஸ்யூவி

நவம்பர் 4ல்., ஹூண்டாயின் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்னர் கசிந்தது

2025 மஹிந்திரா பொலிரோ

ரூ.7.99 லட்சத்தில் 2025 மஹிந்திரா பொலிரோ அறிமுகமானது

Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட்

நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

ரூ.8.29 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோயன் ஏர்கிராஸ் X விற்பனைக்கு வெளியானது

Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா

பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்

ஜேஎஸ்டபிள்யூ மோட்டாரின் முதல் கார் அறிமுகம் எப்பொழுது.!

ரூமியன் எம்பிவி காரில் 6 ஏர்பேக்குகளை சேர்த்த டொயோட்டா

10வது ஆண்டு க்விட் சிறப்பு எடிசனை வெளியிட்ட ரெனால்ட்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan