சீனாவின் ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் வொர்க்ஸ் (FAW) கீழ் செயல்படும் ஹைய்மா ஆட்டோமொபைல் நிறுவனம் எஸ்யூவி, எம்பிவி,செடான் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவில் நடைபெறுகின்ற மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ 2020 கன்காட்சியில் தனது மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது.
First Automobile Works (FAW Group) எனப்படுகின்ற சீன அரசு சார்பு நிறுவனமாக செயல்படுகின்ற ஆரம்ப காலங்களில் ஹைய்மா ஆட்டோமொபைல் பிராண்டில் மஸ்தா நிறுவன கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது இந்நிறுவனம் சொந்தமாக கார்களை உற்பத்தி செய்து வருகின்றது. ஆரம்ப காலங்களில் மஸ்தா பிளாட்ஃபாரம் அடிப்படையில் கார்களை வடிவமைத்த இந்நிறுவனம் இப்பொழுது தனது ஹைய்மா சர்வதேச பிளாட்ஃபாரத்தை சொந்தாமாக உருவாக்கி எஸ்யூவி முதல் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றது.
ஹைய்மா 8 எஸ் மாடலான நடுத்தர எஸ்யூவியை பொறுத்தவரை, கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டருக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடலாக விளங்குகின்றது. 1.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 193 ஹெச்பி பவர் மற்றும் 293 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற 2019 குவாங்சோ ஆட்டோ ஷோவில் ஹைய்மா 7X என்ற பெயரில் மேம்பட்ட மாடலை காட்சிப்படுத்தியது. இந்திய சந்தையில் காட்சிப்படுத்தப்படுகின்ற மாடல் குறித்தான விபரங்கள் வெளியாகவில்லை.
ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் சீனாவைச் சேர்ந்த கிரேட் வாலின் ஹவால் மோட்டார்ஸ் தனது மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது. சாங்கன் ஆட்டோமொபைல் என்ற நிறுவனமும் இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய முதலீடு மேற்கொள்ள உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…