Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவின் முதல் இண்டர்நெட் காரான எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி வசதிகள்

by MR.Durai
2 April 2019, 2:53 pm
in Car News
0
ShareTweetSend

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி செய்திகள்

இந்திய மோட்டார் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் பல்வேறு சுவாரஸ்யமான இண்ட்ர்நெட் இணைப்பு ஆதரவுகளை கொண்டதாக அமைந்திருக்க உள்ளது.

ஹெக்டரில் இடம்பெற உள்ள எம்ஜி iSMART எனப்படும் டெக் வசதி மூலம் முழுமையான ஸ்மார்ட் டெக் வசதிகளை பெற்ற முதல் இந்திய கார் மாடலாக இந்த எஸ்யூவி விளங்க உள்ளது. இந்த மாடலில் 5ஜி இணைய ஆதரவை பெறும் வகையிலான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ஐஸ்மார்ட்

எம்ஜி ஹெக்டர் இண்டர்நெட் காரின் சிறப்புகள்

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி காரை முதல் இண்டர்நெட் கார் என குறிப்பிடும் வகையில் மிகப்பெரிய ஸ்மார்ட் டெக்னாலாஜி அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக M2M சிம் கார்டு என குறிப்பிடப்படும் மெஷின் டூ மெஷின் தொடர்பினை அதாவது  கார்களுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்தும் திறன் பெற்ற முதல் காராகும்.

இந்த கார்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட அவசர கால தேவையை பூர்த்தி செய்யும் வசதிகள், வாகனத்தின் பராமரிப்பு சார்ந்த மேம்பாடுடன், நேவிகேஷன் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 10.4 அங்குல தொடுதிரை ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  பொருத்தப்பட்டுள்ளது.

c0bb7 mg pulse hub and 5g

இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் அம்சங்களை உள்ளடக்கிய இந்த காரில் “Hello, MG” என்ற வார்த்தையுடன் இயக்கத்தை தொடங்கும் செயற்கை அறிவுத்திறன் மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆங்கில மொழி ஆதரவுடன் கொண்டுள்ளது. மேலும் ஏர்டெல் இ சிம் கார்டு 4 ஜி வோல்டிஇ ஆதரவு, எதிர்காலத்தில் 5ஜி ஆதரவை வழங்கவும், மென்பொருள் மேம்பாட்டை OTA (over the air) மூலம் வழங்க உள்ளது.

இந்த எஸ்யூவி மாடலில் வழங்கப்பட உள்ள அவசரகால E-Call சேவை மூலம் வாகனம் விபத்தின் சிக்கும் படசத்தில் உரியவர்களுக்கு தகவலை அனுப்ப 24/7 முறையில் செயல்படும் பல்ஸ் ஹப் சேவை வழங்கப்படும், இதில் காரின் இருப்பிடத்துடன் தகவலை காரின் உரிமையான தலைமை நபருக்கு அனுப்பும் அல்லது அவசர சேவை மையங்களுக்கு அனுப்பி வைக்கும்.

b215f mg ismart

இந்த கருவியில் கூடுதலாக TomTom’s IQ நேவிகேஷன் சிஸ்டம், Gaana பிரீமியம் மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலி, AccuWeather செயலி உட்பட மற்றபடி பொதுவான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.

அடுத்தப்படியாக இந்த காரை சுற்றி 360 டிகிரோ கோணத்தில் படம்பிடித்து காண்பிக்கும் கேமரா, 16 ஜிபி இன்டரனல் ஸ்டோரேஜ் என பல்வேறு அம்சங்களுடன் எம்ஜி ஐஸ்மார்ட் செயலி மூலம் காரின் இருப்பிடத்தை அறிவது, காரினை குறிப்பிட்ட எல்லையைக் கடந்தால் எச்சரிக்கும் அமைப்பு, வேக எச்சரிக்கை போன்றவற்றுடன் சர்வீஸ் தகவல்களை பெறலாம்.

இந்த காரின் பல்வேறு ஸ்மார்ட் வசதிகளை உருவாக்க இந்நிறுவனம் மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஆதரவை பெற்று பல வசதிகளை கொண்டதாக வெளிப்படுத்தியுள்ளது.

0be29 mg voice assistany

வரும் மே மாதம் ஹெக்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ரூபாய் 17 லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எக்ஸ்யூவி 500, ஹாரியர் , ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும்.

MG Hector SUV

MG Hector SUV official images

 

Related Motor News

ஆடம்பர வசதிகளுடன் எம்ஜி M9 எலெக்ட்ரிக் எம்பிவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2025

எம்ஜி வின்ட்சர் EV காரின் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்புகள்

இரண்டு எம்ஜி கார்களில் சிறப்பு எடிசன் விற்பனைக்கு வெளியானது

₹ 13.50 லட்சம் விலையில்‌ எம்ஜி வின்ட்சர் இவி விலை வெளியானது

BAAS திட்டத்தை காமெட் இவி, ZS EV என இரண்டுக்கும் விரிவுப்படுத்திய ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

Tags: MG HectorMG Hector SUVMG Motor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

vinfast vf7 car

தூத்துக்குடியில் தயாராகும் வின்ஃபாஸ்ட் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

kia carens clavis ev price

ரூ.17.99 லட்சத்தில் கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி விற்பனைக்கு வெளியானது

ரூ.59.89 லட்சம் விலையில் டெஸ்லா மாடல் Y விற்பனைக்கு வெளியானது

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

அடுத்த செய்திகள்

vinfast vf7 car

தூத்துக்குடியில் தயாராகும் வின்ஃபாஸ்ட் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

kinetic dx electric scooter

ஜூலை 17 ., கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

kia carens clavis ev price

ரூ.17.99 லட்சத்தில் கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி விற்பனைக்கு வெளியானது

டெஸ்லா மாடல் Y விலைப்படியல்

ரூ.59.89 லட்சம் விலையில் டெஸ்லா மாடல் Y விற்பனைக்கு வெளியானது

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan