இந்திய மோட்டார் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் பல்வேறு சுவாரஸ்யமான இண்ட்ர்நெட் இணைப்பு ஆதரவுகளை கொண்டதாக அமைந்திருக்க உள்ளது.
ஹெக்டரில் இடம்பெற உள்ள எம்ஜி iSMART எனப்படும் டெக் வசதி மூலம் முழுமையான ஸ்மார்ட் டெக் வசதிகளை பெற்ற முதல் இந்திய கார் மாடலாக இந்த எஸ்யூவி விளங்க உள்ளது. இந்த மாடலில் 5ஜி இணைய ஆதரவை பெறும் வகையிலான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
எம்ஜி ஹெக்டர் இண்டர்நெட் காரின் சிறப்புகள்
எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி காரை முதல் இண்டர்நெட் கார் என குறிப்பிடும் வகையில் மிகப்பெரிய ஸ்மார்ட் டெக்னாலாஜி அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக M2M சிம் கார்டு என குறிப்பிடப்படும் மெஷின் டூ மெஷின் தொடர்பினை அதாவது கார்களுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்தும் திறன் பெற்ற முதல் காராகும்.
இந்த கார்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட அவசர கால தேவையை பூர்த்தி செய்யும் வசதிகள், வாகனத்தின் பராமரிப்பு சார்ந்த மேம்பாடுடன், நேவிகேஷன் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 10.4 அங்குல தொடுதிரை ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் அம்சங்களை உள்ளடக்கிய இந்த காரில் “Hello, MG” என்ற வார்த்தையுடன் இயக்கத்தை தொடங்கும் செயற்கை அறிவுத்திறன் மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆங்கில மொழி ஆதரவுடன் கொண்டுள்ளது. மேலும் ஏர்டெல் இ சிம் கார்டு 4 ஜி வோல்டிஇ ஆதரவு, எதிர்காலத்தில் 5ஜி ஆதரவை வழங்கவும், மென்பொருள் மேம்பாட்டை OTA (over the air) மூலம் வழங்க உள்ளது.
இந்த எஸ்யூவி மாடலில் வழங்கப்பட உள்ள அவசரகால E-Call சேவை மூலம் வாகனம் விபத்தின் சிக்கும் படசத்தில் உரியவர்களுக்கு தகவலை அனுப்ப 24/7 முறையில் செயல்படும் பல்ஸ் ஹப் சேவை வழங்கப்படும், இதில் காரின் இருப்பிடத்துடன் தகவலை காரின் உரிமையான தலைமை நபருக்கு அனுப்பும் அல்லது அவசர சேவை மையங்களுக்கு அனுப்பி வைக்கும்.
இந்த கருவியில் கூடுதலாக TomTom’s IQ நேவிகேஷன் சிஸ்டம், Gaana பிரீமியம் மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலி, AccuWeather செயலி உட்பட மற்றபடி பொதுவான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.
அடுத்தப்படியாக இந்த காரை சுற்றி 360 டிகிரோ கோணத்தில் படம்பிடித்து காண்பிக்கும் கேமரா, 16 ஜிபி இன்டரனல் ஸ்டோரேஜ் என பல்வேறு அம்சங்களுடன் எம்ஜி ஐஸ்மார்ட் செயலி மூலம் காரின் இருப்பிடத்தை அறிவது, காரினை குறிப்பிட்ட எல்லையைக் கடந்தால் எச்சரிக்கும் அமைப்பு, வேக எச்சரிக்கை போன்றவற்றுடன் சர்வீஸ் தகவல்களை பெறலாம்.
இந்த காரின் பல்வேறு ஸ்மார்ட் வசதிகளை உருவாக்க இந்நிறுவனம் மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஆதரவை பெற்று பல வசதிகளை கொண்டதாக வெளிப்படுத்தியுள்ளது.
வரும் மே மாதம் ஹெக்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ரூபாய் 17 லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எக்ஸ்யூவி 500, ஹாரியர் , ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும்.