Automobile Tamilan

புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

Hyundai Verna Amazon grey colour

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிரபலமான செடான் மாடலான வெர்னா காரில் கூடுதலாக அமேசான் கிரே என்ற புதிய நிறத்தை பெற்றுள்ள நிலையில் கூடுதலாக ரூ.4,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிதாக வந்துள்ள அமேசான் கிரே நிறத்துடன் சேர்த்து தற்போது எட்டு விதமான ஒற்றை வண்ணங்களை பெறும் நிலையில் கூடுதலாக வெள்ளை நிறத்துடன் கருப்பு நிற மேற்கூரை மற்றும் சிவப்பு நிறத்துடன் கருப்பு நிற மேற்கூரை என இரண்டு விதமான டூயல் டோன் விருப்பங்களை பெறுகின்றது.

வெர்னாவில் புதிய நிறத்தை தவிர எஞ்சின் மற்றும் வசதிகளிலும் பெரிதாக மாற்றம் இல்லை என்றாலும் கூடுதலாக பின்புறத்தில் இரு பிரிவுகளாக கொண்ட ஸ்பாய்லர் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது.

1.5-லிட்டர் டர்போ GDi, பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல் 160 Hp வரை பவர் வெளிப்படுத்தும் நிலையில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு விதமாக வழங்கப்பட்டிருக்கும். இதன் மைலேஜ்  20 kpl (MT) மற்றும் 20.6kpl (IVT) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அடுத்து, 115 Hp பவர் மற்றும் 144Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் IVT என இரு ஆப்ஷனை  கொண்டிருக்கும். இதன் மைலேஜ் 18.6kpl (MT) மற்றும் 19.6kpl (IVT) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2024 ஹூண்டாய் வெர்னா ஆரம்ப விலை ரூ.11,00,400 முதல் துவங்கி ரூ.17,47,800 வரை உள்ளது.

Variant Price (INR) (Ex-
Showroom)
1.5 MPi MT EX [With ESC] 1,100,400
1.5 MPi MT S 1,205,400
1.5 MPi MT SX 1,308,400
1.5 MPi iVT SX 1,433,400
1.5 MPi MT SX(O) 1,475,800
1.5 MPi iVT SX(O) 1,629,400
1.5 Turbo GDi MT SX 1,493,400
1.5 Turbo GDi MT SX DT 1,493,400
1.5 Turbo GDi DCT SX 1,617,900
1.5 Turbo GDi DCT SX DT 1,617,900
1.5 Turbo GDi MT SX(O) 1,608,800
1.5 Turbo GDi MT SX(O) DT 1,608,800
1.5 Turbo GDi DCT SX(O) 1,747,800
1.5 Turbo GDi DCT SX(O) DT 1,747,800

Exit mobile version