Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2023 ஹூண்டாய் வெர்னா விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
March 21, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

2023 Hyundai Verna car

வரும் ஏப்ரல் முதல் டெலிவரி துவங்கப்பட உள்ள 2023 ஹூண்டாய் வெர்னா காரின் அறிமுக ஆரம்ப விலை ₹ 10.90 லட்சம் முதல் ₹ 17.38 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட பல்வேறு நவீனத்துவமான வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.

வெர்னா காரில் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகின்ற ADAS நுட்பம் இடம்பெற்றுள்ளது.. இது முன் மற்றும் பின்புற ரேடார் டிடெக்டர்களுடன் முன் கேமரா, முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும் தவிர்ப்பு உதவி, ஸ்டாப் அண்ட் கோ மூலம் ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் எச்சரிக்கை மற்றும் பிளைண்ட் ஸ்பாட் உதவி எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான வெளியேறும் எச்சரிக்கை போன்ற அம்சங்களுடன் வந்துள்ளது.

Hyundai Verna 2023

புதிய 1.5-லிட்டர் டர்போ GDi, பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல் 160 Hp வரை பவர் வெளிப்படுத்தலாம். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு விதமாக வழங்கப்பட்டிருக்கும். எரிபொருள் சிக்கனம் 20 kpl (MT) மற்றும் 20.6kpl (IVT) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அடுத்து, 115 Hp பவர் மற்றும் 144Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் இன்டலிஜென்ட் வேரிபிள் டிரான்ஸ்மிஷன் (IVT) என இரு ஆப்ஷனை  கொண்டிருக்கும். எரிபொருள் சிக்கனம் 18.6kpl (MT) மற்றும் 19.6kpl (IVT) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய காரில் இடம்பெற உள்ள என்ஜின் RDE இணக்கமாகவும், E2O எரிபொருளுக்கு ஏற்றதாக இருக்கும். புதிய வெர்னாவில் டீசல் என்ஜின் இடம்பெறவில்லை.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முந்தைய தலைமுறை மாடலை விட நீளமாகவும் அகலமாகவும் உள்ளது. புதிய கார் 4,535 மிமீ நீளம், 1,765 மிமீ அகலம் மற்றும் 1,475 மிமீ உயரம், ஆனால் உயரத்தில் எந்த மாற்றமும் இல்லை.  528 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெர்னா EX, S, SX மற்றும் SX (O) வகைகளில் கிடைக்கின்றது.

இன்டிரியர் லேஅவுட் கொடுக்கப்பட்ட அகலமான மற்றும் தாராளமான இடவசதி வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு இரட்டை திரை அமைப்புடன் கொடுக்கப்பட்டு 10.2-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை மற்றும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் பல்வேறு வசதிகளை பெற உள்ளது. இதில் 8-ஸ்பீக்கர்களை கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டத்தையும் பெறுகின்றது.

new hyundai verna interior

பதிய வெர்னா HVAC, மற்றும் ஹீட் சீட் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மாறக்கூடிய யூனிட் போன்ற பிரிவு-முதல் அம்சங்களையும் பெறுகிறது. UI அமைப்பினை மாற்றுகிறது மற்றும் பொத்தானை தொடும்போது கட்டுப்படுத்துகிறது. வரவிருக்கும் வெர்னா தொடர்ந்து காற்றோட்டமான முன் இருக்கைகளைப் பெற உள்ளது.

New hyundai Verna Price

Engine/Gearbox VARIANTS
EX S SX SX(O)
1.5 Petrol MT Rs 10.90 lakh Rs 11.95 lakh Rs 12.98 lakh Rs 14.66 lakh
1.5 Petrol iVT — — Rs 14.23 lakh Rs 16.19 lakh
1.5 Turbo MT — — Rs 14.83 lakh Rs 15.99 lakh
1.5 Turbo DCT — — Rs 16.08 lakh Rs 17.38 lakh

 

வெர்னா காருக்கு போட்டியாளர்களாக ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற மாடல்கள் உள்ளன.

Tags: Hyundai Verna
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version