நடப்பு பண்டிகை கால நவம்பர் 2023 மாதத்தில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் தனது எஸ்யூவி மற்றும் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.2,00,000 வரை கோனா EV மாடலுக்கு வழங்குகின்றது.
எக்ஸ்டர், வெனியூ கிரெட்டா உள்ளிட்ட பிரபல எஸ்யூவி கார்களுக்கு பெரிய அளவில் சலுகை வழங்கப்படவில்லை.
Hyundai Festive offers
ஹேட்ச்பேக் ரக கிராண்ட் i10 நியோஸ் காருக்கு அதிகபட்சமாக ரூ. 43,000 வரை கவர்ச்சிகரமான தள்ளுபடி திட்டங்களுடன் கிடைக்கிறது. இதில் ரொக்க தள்ளுபடி ரூ. 30,000 (CNG மட்டும்), எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 10,000 சேர்த்து ரூ. 3,000 கார்ப்பரேட் தள்ளுபடி. கிராண்ட் i10 நியோஸின் AMT டிரான்ஸ்மிஷனுக்கு ரூ. 23,000 தள்ளுபடி மற்றும் மற்ற அனைத்து MT டிரிம்களும் ரூ.33,000 சலுகையுடன் கிடைக்கின்றன.
செடான் ரக ஆரா காருக்கு ஆரா ரூ. 33,000 CNG மூலம் இயங்கும் டிரிம்களுக்கு ரூ.23,000 சலுகை உள்ளது.
i20 வரிசையில் உள்ள பழைய மாடல்களுக்கு ரூ.40,000, i20 N-லைன் வரிசைக்கு ரூ.50,000 வழங்கப்படுதுவடன், புதிய ஐ20 காருக்கு ரூ.10,000 வழங்கப்படுகின்றது.
புதிய தலைமுறை வெர்னா மாடலுக்கு ரூ.45,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். இதில் ரூ. 20,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ. 25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.
7-சீட்டர் ஹூண்டாய் அல்கசார், பெட்ரோல் வகைகளில் ரூ.35,000 தள்ளுபடி மற்றும் டீசல் வரிசைக்கு ரூ. 20,000 போனஸ் வழங்கப்படுகின்றது. ICE மாடல்களைத் தவிர, ஹூண்டாய் அதிகபட்சமாக கோனா இவி எஸ்யூவிக்கு ரூ.2,00,000 ரொக்க தள்ளுபடியை வழங்குகிறது.
குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் நடப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு டீலர்களிடம் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட சலுகைகளை நவம்பர் மாதம் மட்டும் கிடைக்கலாம். முழுமையான சலுகைகள் குறித்தான விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகலாம்.