2025 ஆம் ஆண்டிற்கான ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான க்ரெட்டா எஸ்யூவி காரில் கூடுதலாக SX Premium மற்றும் EX(O) என இரு வேரியண்டுகள், மற்ற சில வேரியண்டுகளில் கூடுதல் வசதிகள் மற்றும் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்கள், டிசைன், எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை.
க்ரெட்டா EX (O)
1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கின்ற EX (O) வேரியண்டில் பனேரோமிக் சன்ரூஃப், எல்இடி ரீடிங் விளக்கினை பெற்றுள்ள இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.12.97 லட்சம் முதல் ரூ.15.96 லட்சம் வரை அமைந்துள்ளது.
க்ரெட்டா SX Premium
போஸ் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், காற்றோட்டமான முன் இருக்கைகள், 8-வழி பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, அனைத்து இருக்கைகளுக்கும் தோல் அப்ஹோல்ஸ்டரி மற்றும் கூடுதல் இரண்டாவது வரிசை கால் இடத்திற்கான ஸ்கூப்-அவுட் சீட்பேக்குகளை பெற்று 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷனில் ரூ.16.18 லட்சம் முதல் ரூ.17.76 லட்சம் வரை அமைந்துள்ளது.
S(O) SX(O) வேரியண்டில் கூடுதல் வசதிகளாக மழையை உணர்ந்து செயல்படும் சென்சார், பின்புற இருக்கைகளுக்கு வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஸ்கூப் செய்யப்பட்ட இருக்கைகள், கூடுதலாக, நிறுவனம் S (O) மற்றும் அதற்கு மேல் மோஷன் சென்சார் கொண்ட ஸ்மார்ட் கீ பெற்று, இறுதியாக, டைட்டன் கிரே மேட் மற்றும் ஸ்டாரி நைட் என இரண்டு நிறமும் அனைத்து வகையிலும் கிடைக்கின்றது.
Variant | Price | |
EX (O) MT | Rs. 12.97 lakh | |
EX (O) CVT | Rs. 14.37 lakh | |
EX (O) diesel MT | Rs. 14.56 lakh | |
EX (O) diesel AT | Rs. 16.00 lakh | |
SX Premium MT | Rs. 16.18 lakh | |
SX (O) MT | Rs. 17.46 lakh | |
SX Premium CVT | Rs. 17.68 lakh | |
SX Premium diesel MT | Rs. 17.76 lakh | |
SX (O) CVT | Rs. 18.92 lakh | |
SX (O) diesel MT | Rs. 19.04 lakh | |
SX (O) diesel AT | Rs. 20 lakh | |
SX (O) DCT | Rs. 20.18 lakh | |