ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2023 ஆம் வருடாந்திர முடிவை கொண்டாடும் வகையில் தனது டூஸான் எஸ்யூவி காருக்கு அதிகபட்சமாக ரூ.1.50 வரை சலுகையை அறிவித்துள்ளது.

மற்றபடி, எக்ஸ்டர், வென்யூ மற்றும் புதிய ஹூண்டாய் கிரெட்டா ஜனவரி மாதம் வரவுள்ள நிலையில் எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

Hyundai Year end offers

பிரீமியம் எஸ்யூவி சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் சலுகை கிடைக்கும். இந்த சலுகை டீசல் என்ஜின் பெற்ற வேரியண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஹூண்டாய் ஐ20 காரின் விலையில் ரூ.40,000 மற்றும் ஐ20 N லைன் மாடலுக்கு ரூ.50,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் ஐ10 நியோ சிஎன்ஜி மாடலுக்கு ரூ.48,000 மற்றும் பெட்ரோல் வேரியண்ட் ரூ.33,000 வரை கிடைக்கின்றது.

ஹூண்டாய் வெர்னா மாடலுக்கு ரூ.45,000, அலக்சரா எஸ்யூவி பெட்ரோல் மாடலுக்கு ரூ.35,000, டீசலுக்கு ரூ.20,000 மற்றும் ஹூண்டாய் ஆரா பெட்ரோலுக்கு ரூ.33,000 மற்றும் சிஎன்ஜி வேரியண்ட் விலை ரூ.20,000 வரை கிடைக்கின்றது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் 31-12-2023 வரை மட்டுமே வழங்கப்படும். டீலர்கள், வேரியண்ட் அடிப்படையில் மாறக்கூடும். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள ஹூண்டாய் டீலரை அனுகலாம்.