Automobile Tamilan

இந்திய ராணுவத்தில் இணைந்த டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்

hilux add indian army

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், முதன்முறையாக இந்திய ராணுவத்துக்கு ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை விநியோகம் செய்துள்ளது. ஏற்கனவே, ராணுவத்தில் மாருதி ஜிப்ஸி, மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா ஸ்ட்ரோம், செனான் பிக்கப்  ஆகியவை இடம்பெற்றுள்ளது.

13000 அடி உயரத்தில் முதல் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை வரையிலான கடுமையான வானிலை மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளில் ஹைலக்ஸ் 2 மாதங்களுக்கும் மேலாக இந்திய இராணுவத்தின் வடக்குப் படையின் விரிவான மற்றும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Toyota Hilux

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் கடினத்தன்மை, சிறப்பான தரம், நம்பகத்தன்மை மற்றும் ஆஃப்-ரோடிங் திறன்களுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டு வாகனமாக ஹைலக்ஸ் விளங்குகின்றது.

ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்ற ஹைலக்ஸ் மாடலில்  2.8-லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 204 PS மற்றும் 500 Nm வெளிப்படுத்தும். இதில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றது.

ஆல் வீல் டிரைவ் பெற்றுள்ள ஹைலக்ஸ் மேம்படுத்தப்பட்ட ஆஃப்-ரோடு திறனுக்காக, இது குறைந்த ரேன்ஜ் கியர்பாக்ஸ் மற்றும் முன் மற்றும் பின்புற எலக்ட்ரானிக் மூலம் டிஃபெரன்ஷியல் லாக் பெறுகிறது. இது 29 டிகிரி அணுகுமுறை கோணத்தையும் 26 டிகிரி புறப்படும் கோணத்தையும் கொண்டுள்ளது. கூடுதலாக, ஹைலக்ஸ் 700mm நீர் உள்ள இடங்களிலும் பயணிக்கும் திறன் கொண்டது.

இந்தியாவில் டொயோட்டா ஹைலக்ஸ் விலைப் பட்டியலை ரூ.30,40,000 – ரூ. 37,90,000/- (எக்ஸ்-ஷோரூம்)

Exit mobile version