Automobile Tamilan

சிறப்பு கிராவிட்டி எடிசனை வெளியிட்ட கியா இந்தியா

kia seltos gravity edition

கியா இந்தியாவின் பிரபலமான செல்டோஸ், கேரன்ஸ் மற்றும் சொனெட் என மூன்று மாடல்களிலும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு கிராவிட்டி எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செல்டோஸ் கிராவிட்டி எடிசன்

HTX செல்டோஸ் வேரியண்ட் அடிப்படையில் 115hp 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல், ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், 116Hp, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று கிராவிட்டி மாடலில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஹோல்டு வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 17 இன்ச் அலாய் வீல், பின்புற ஸ்பாய்லர், டேஸ்போர்டு கேமரா, 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், காற்றோட்டமான முன்பக்க இருக்கைகள், மியூசிக் சிஸ்டம் மற்றும் கிராவிட்டி பேட்ஜ் ஆகியவற்றை பெற்றுள்ளது.

வெள்ளை, அரோரா கருப்பு மற்றும் டார்க் கன் மெட்டல் மேட் என மூன்று நிறங்களுடன் கிடைக்கின்றது.

சொனெட் கிராவிட்டி எடிசன்

HTK+ சொனெட் வேரியண்ட் அடிப்படையில் வெள்ளை, அரோரா கருப்பு மற்றும் கிராபைட் மேட் என மூன்று நிறத்துடன் 82hp 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல், 120hp 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், 116Hp, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று கிராவிட்டி மாடலில் இணைக்கப்பட்டுள்ளது.

டேஸ்போர்டு கேமரா, வயர்லெஸ் சார்ஜர், ஆர்ம்ரெஸ்ட், 60:40 ஸ்பிளிட் இருக்கைகள், பின்புற அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் கப் ஹோல்டர் மற்றும் கிராவிட்டி பேட்ஜ் ஆகியவற்றை பெற்றுள்ளது.

கேரன்ஸ் கிராவிட்டி எடிசன்

கேரன்ஸ் Premium (O) வேரியண்ட் அடிப்படையில் வெள்ளை, அரோரா கருப்பு மற்றும் கிராபைட் மேட் என மூன்று நிறத்துடன் 115hp 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல், 1600hp 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், 116Hp, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று கிராவிட்டி மாடலில் இணைக்கப்பட்டுள்ளது.

டேஸ்போர்டு கேமரா,ஒற்றை-பேன் சன்ரூஃப், செயற்கை கருப்பு தோல் இருக்கைகள், ஆர்ம்ரெஸ்ட்கள், மற்றும் கிராவிட்டி பேட்ஜ் ஆகியவற்றை பெற்றுள்ளது.

(ex-showroom)

Exit mobile version