கியா மோட்டார்ஸ் 18,766 கார்களை விற்பனையை பதிவு செய்துள்ளது – மே 2023

மிக வேகமாக வளர்ந்து வரும் கியா மோட்டார்ஸ் விற்பனை எண்ணிக்கை மே 2023-ல் 18,766 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய மே 2022-ல் 18,718 ஆக பதிவு செய்திருந்தது. முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 42 எண்ணிக்கையை மட்டும் கூடுதலாக விற்பனை செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2023-ல்  23,216 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. இந்த மாதத்துடன் ஒப்பீடுகையில் 19% விற்பனை சரிவடைந்துள்ளது.

Kia Motors India Sales Report – May 2023

விற்பனை நிலவரம் குறித்து கியா இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் ஹர்தீப் சிங் ப்ரார் கூறுகையில், “மே மாதத்தில் ஒரு வாரத்திற்கு எங்கள் ஆலை ஆண்டு பராமரிப்பு பணிநிறுத்தம் காரணமாக சில உற்பத்தி சரிவை நாங்கள் எதிர்கொண்டோம். இது எங்கள் எண்ணிக்கையை பாதித்தது, நாங்கள் உறுதியாக இருக்கிறோம் வரவிருக்கும் மாதங்களில் செயல்திறன், சமீபத்திய iMT கியர்பாக்ஸ் வேரியண்டிற்கான தேவை அதிகரித்து வருகின்றது.

இந்த மாதம், iMT எங்கள் மொத்த விற்பனையில் 38% பங்களித்தது.  சோன்ட் 8,251 எண்ணிக்கையை பெற்று முதலிடத்திலும் கேரன்ஸ் மற்றும் செல்டோஸ் தொடர்ந்து வளர்ச்சிக்கு உதவி வருகின்றன என குறிப்பிட்டார்.

அடுத்து இரண்டாமிடத்தில், 6,367 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. செல்டோஸ், 4,065 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

Share