Automobile Tamilan

மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் Vs பலேனோ ஒப்பீடு

மாருதி சுசூகி Fronx க்ராஸ்ஓவர் காரில் உள்ள வசதிகளுடன் விற்பனையில் உள்ள மாருதி சுசூகி பலேனோ என இரு கார்களை ஒப்பீட்டு பல்வேறு முக்கிய சிறப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பலேனோ காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள Fronx காரில் தோற்ற மாற்றங்கள் உட்பட ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் சில வசதிகளை கூடுதலாக பெற்றிருக்கும்.

மாருதி Fronx Vs மாருதி பலேனோ

விற்பனையில் கிடைத்து வருகின்ற பலேனோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் HEARTECT பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபிரான்க்ஸ் காரின் நீளம், அகலம் மற்றும் உயரம், குறிப்பாக ஃபிரான்க்ஸ் காரின் வீல் பேஸ் 20 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சற்று கூடுதலாக அமைந்து அகலமான பம்பர், நேர்த்தியான கூபே ரக கார்களுக்கு இணையாக பின்புற கதவுகள் மற்றும் பம்பர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்புற பம்பர் கிராண்ட் விட்டாரா காரின் உந்துதலை பெற்று ஸ்பிளிட் ஹெட்லைட் செட்டப், அகலமான பம்பர் கிளாடிங், உயரமான வீல் ஆர்சு பெற்றுள்ளது. பின்புறத்தில் சரிவான மேற்கூறை அகலமான கிளாடிங் பெற்ற பம்பர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

Dimensions

Fronx

Baleno

Length

3,995mm

3,990mm

Width

1,765mm

1,745mm

Height

1,550mm

1,500mm

Wheelbase

2,520mm

2,520mm

அடுத்ததாக இன்டிரியர் அமைப்பில் பலேனோ காரில் உள்ளதை போன்ற வசதிகளை பெற்றிருந்தாலும் டிசைனிங் மற்றும் டேஸ்போர்ட் கலரினை பொறுத்தவரை விற்பனையில் உள்ள கிராண்ட் விட்டாரா காரின் இன்டிரியரை போன்ற தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது.

ஒன்பது அங்குல இன்ஃபோடெயின்மென்ட் , வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் ஆகியவற்றுடன் ஆறு ஏர்பேக்குகள், ESP, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் 360-டிகிரி கேமராவுடன் பாதுகாப்பு வசதிகள் ஒரே மாதிரியாக இருக்கும். ஃப்ரான்க்ஸ் காரில் ஒரே மாற்றம் வயர்லெஸ் போன் சார்ஜிங் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்

Fronx மற்றும் Baleno என இரு கார்களும் பொதுவாக 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.

டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

Specs Fronx Baleno
Engine 1.2-litre petrol 1.0-litre turbo-petrol 1.2-litre petrol
Power 90PS 100PS 90PS
Torque 113Nm 148Nm 113Nm
Transmissions 5-speed MT / 5-speed AMT 5-speed MT / 6-speed AT 5-speed MT / 5-speed AMT

மீண்டும் பவர்ஃபுல்லான டர்போ பெட்ரோல் என்ஜினை மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் கார் மூலம் கொண்டு வந்துள்ளது.

1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் (மைல்டு ஹைபிரிட்) 100PS மற்றும் 148Nm டார்க் வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.

ஃபிரான்க்ஸ் மைலேஜ் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் லிட்டருக்கு 21.79 kmpl  மற்றும் AMT கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 22.89 kmpl வரை வழங்குகிறது; 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்ற மேனுவல் கியர்பாக்ஸுடன் 21.5 kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 20.01 kmpl வழங்குகிறது.

மாருதி Fronx விலை எவ்வளவு ?

மாருதி Fronx காரின் விலை ரூ. 7.47 லட்சம் முதல் ரூ. 13.13 லட்சம் வரை உள்ளது. பலேனோ காரை விட ரூ.80,000 வரை கூடுதலாக துவங்குகின்றது. பலேனோ காரின் விலை ரூ.6.61 லட்சம் முதல் துவங்கி ரூ.9.88 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்றது.

Exit mobile version