மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய ஃபிரான்க்ஸ் (Maruti Fronx) கார் கூபே ரக ஸ்டைலை பெற்ற மாடல் பலேனோ காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு கிராண்ட் விட்டாரா காரின் தோற்ற உந்துதலை பெற்றதாக விளங்குகின்றது. தற்பொழுது ரூ.11,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு மேற்கொள்ளப்படுகின்றது.
க்ராஸ்ஓவர் ஸ்டைலை பெற்ற பிரான்க்ஸ் காரில் பெரும்பாலான பாகங்கள் கிராண்ட் விட்டாரா மற்றும் பலேனோ காரிலிருந்து பெற்றுள்ள இந்த காரில் இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும், 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற எஸ்யூவி கார்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
Maruti Suzuki Fronx
மாருதியின் பலேனோ காரில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள Fronx கார் சுசூகியின் ஹார்டெக்ட் ஃபிளாட்ஃபாரத்தில் மிக நேர்த்தியான பம்பரினை கிராண்ட் விட்டாரா காரிலிருந்து பெறப்பட்ட பம்பர், முன்புற பம்பருடன் மிக நேர்த்தியான கிரில் அமைப்பு, ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் உயரமான வீல் ஆர்சு ஆகியவற்றை கொண்டதாக அமைந்துள்ளது.
ஃபிராங்க்ஸ் காரின் பலவற்றை பலேனோ ஹேட்ச்பேக்கிலிருந்து பெற்று பின்புற சக்கரங்கள் மற்றும் டெயில்கேட் நோக்கி சாய்வான நோக்கத்திலான கூரை போன்ற கொண்டுள்ளது. மாருதி ஃப்ரான்க்ஸ் கார் 3,995 மிமீ நீளம், 1,550 மிமீ உயரம் மற்றும் 1,765 மிமீ அகலம் பெற்றதாக அமைந்துள்ளது.
இந்த காரில் மொத்தமாக ஆறு ஒற்றை நிற வண்ணங்கள் மற்றும் மூன்று டூயல் டோன் விருப்பம் பெற்றுள்ளது. அவை நெக்ஸா ப்ளூ, அர்டிக் வெள்ளை, கிராண்டியர் கிரே, எர்த்தன் பிரவுன், ஓப்பெலன்ட் ரெட் மற்றும் ஸ்பிளென்டிட் சில்வர் அடுத்து, டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் ப்ளூயிஷ் பிளாக் கூரையுடன் கூடிய பிரவுன், ப்ளூயிஷ் பிளாக் ரூஃப் உடன் ஓபெலண்ட் ரெட் மற்றும் ப்ளூயிஷ் பிளாக் ரூஃப் கொண்ட சில்வர் ஆகும்.
பேஸ் வேரியண்டுகளில் சாதாரண ஸ்டீல் வீல் பெற்றுள்ள நிலையில் டாப் வேரியண்டுகளில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் பெற்று 195/60 டயர் கொண்டுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்று ஏபிஎஸ், டூயல் ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் இஎஸ்பி ஆகியவற்றை பெற்றுள்ளது.
இன்டிரியர்
மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ் காரில் டூயல் டோன் கொண்ட டேஷ்போர்டில் உலோகம் போன்ற மேட் ஃபினிஷ் மற்றும் பல்வேறு டிசைன் மாறுபாடுகளை வெளிப்படுத்த சில்வர் இன்ஷர்ட்கள் உள்ளன. மற்ற வசதிகளை பொறுத்தவரை மிதக்கும் ஒன்பது இன்ச் SmartPlay Pro+ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏர் வென்ட்கள், மூன்று ஸ்போக் பெற்ற ஸ்டீயரிங் வீல் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.
கூடுதலாக அம்சங்களாக 360 டிகிரி கேமரா மற்றும் 40 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட நுட்பங்களை வழங்கும் சுசூகி கனெக்ட் வசதியை பெறுகின்றது.
Zeta மற்றும் Alpha என இரண்டு உயர்தர வேரியண்டுகளில் கிடைக்கின்ற Suzuki Connect நுட்பத்தின் மூலம் அவசர எச்சரிக்கை, பிரேக்டவுன் அறிவிப்பு, ஜியோஃபென்ஸ், வேலட் எச்சரிக்கை, ரிமோட் ஏசி கட்டுப்பாடு, ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு, குறைந்த எரிபொருள் அல்லது குறைந்த அளவிலான எரிபொருள் இருப்பு எச்சரிக்கை, ஓவர் ஸ்பீட் எச்சரிக்கை, ஏசி போன்ற அம்சங்களுடன் கூடுதலாக ஏசி செயலற்ற நிலை, டோர் லாக் அலர்ட் , சீட் பெல்ட் அலர்ட், ஹெட்லேம்ப்கள் மற்றும் ஹசார்ட் லைட், நிகழ்நேரத்தில் வாகன இருப்பிட கண்காணிப்பு, முந்தைய கார் செயல்பாட்டிற்கு செல்லவும் மற்றும் பயண வரலாற்றினை பார்க்கலாம்.
ஃபிரான்க்ஸ் என்ஜின்
ஃபிரான்க்ஸ் காரில் இடம்பெற்றுள்ள என்ஜின் ஆப்ஷன் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டையும் பெறுகின்றது.
அதிக்கப்படியான பவரை வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறும்.
Fronx Mileage
மாருதி ஃபிரான்க்ஸ் மைலேஜ் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் லிட்டருக்கு 21.79 kmpl மற்றும் AMT கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 22.89 kmpl வரை வழங்குகிறது; 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்ற மேனுவல் கியர்பாக்ஸுடன் 21.5 kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 20.01 kmpl வழங்குகிறது.
மாருதி Fronx வேரியண்ட் வசதிகள்
ஃப்ரான்க்ஸ் காரில் சிக்மா, டெல்டா, டெல்டா+, ஜெட்டா மற்றும் ஆல்பா என ஐந்து வகைகளில் கிடைக்கும். சிக்மா மற்றும் டெல்டா, டெல்டா + வேரியண்டுகளில் மட்டும் 1.2 லிட்டர் கே சீரிஸ் என்ஜின் உள்ளது. மற்ற டெல்டா+, ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்டுகளில் டர்போ மட்டும் உள்ளது.
Fronx Sigma Engine: 1.2 petrol-MT
- ஹாலோஜன் புரொஜெக்டர் முகப்பு விளக்கு
- ஸ்டீல் வீல் உடன் வீல் கவர்
- டூயல் டோன் டேஸ்போர்ட்
- கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ
- தானியங்கி காலநிலை கட்டுப்பாடு
- பவர் விண்டோஸ்
- 60:40 பின் இருக்கை
- ஸ்டீயரிங் டில்ட் வசதி
- இரட்டை காற்றுப்பைகள்
- ஹில்-ஹோல்ட் அசிஸ்ட்
- ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள்
- ரியர் டிஃபோகர்
- ESP (எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்)
Fronx Delta Engine: 1.2 petrol-MT/AMT
சிக்மா வசதிகளுடன் கூடுதலாக,
- குரோம் பூச்சூ பெற்ற கிரில்
- விங் மிரர்களில் டர்ன் இன்டிகேட்டர்
- ரியர் பார்சல் டிரே
- 7.0-இன்ச் தொடுதிரை டிஸ்பிளே
- வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ
- SmartPlay Pro இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- வாய்ஸ் கண்ட்ரோல் அம்சங்கள்
- USB மற்றும் புளூடூத் இணைப்பு
- OTA மேம்பாடு
- 4-ஸ்பீக்கர்கள்
- மின்சாரத்தில் சரிசெய்யக்கூடிய விங் கண்ணாடிகள்
- ஸ்டீயரிங் வீலில் கண்ட்ரோல் சுவிட்ச்
Fronx Delta+ Engine: 1.0 petrol-MT/1.2 petrol-MT/AMT
முந்தைய வேரியண்டை விட கூடுதல் வசதிகளாக அல்லது மாறுபட்ட சிறப்புகள்
- ரன்னிங் விளக்குகளுடன் கூடிய ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப்
- 16 அங்குல அலாய் வீல்
Fronx Zeta Engine: 1.0 petrol-MT/AT
டெல்டா+ வேரியண்டை விட கூடுதலாக,
- பக்கவாட்டு மற்றும் கர்டேன் ஏர்பேக்குகள்
- ரியர்வியூ கேமரா
- இரண்டு ட்வீட்டர்கள்
- இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் MID
- வயர்லெஸ் சார்ஜர்
- பேடல் ஷிஃப்டர் (AT மட்டும்)
- டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங்
- ஸ்மார்ட் கீ மூலம் எஞ்சின் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப்
- உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை
- முன்புறத்தில் ஆர்ம்ரெஸ்ட்
- பின்புற ஏசி வென்ட்கள்
- பின்புற Type-A மற்றும் Type-C USB சார்ஜிங் சாக்கெட்டுகள்
- எல்இடி உடன் இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்
- ரியர் வைப்பர் உடன் வாஷர்
- குரோம் பயன்படுத்தப்பட்ட உட்புற கதவு கைப்பிடிகள்
- சுசுகி கனெக்ட் வசதி
Fronx Alpha Engine: 1.0 petrol-MT/AT
கூடுதல் வசதிகளாக,
- 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்
- டூயல் டோன் வண்ணங்கள்
- லெதர் சுற்றபட்ட ஸ்டீயரிங்
- க்ரூஸ் கட்டுப்பாடு
- ஹெட்-அப் டிஸ்பிளே
- 360 டிகிரி கேமரா
- ஆட்டோ ஐஆர்விஎம்
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, ஃபிரான்க்ஸ் காரில் ஆறு ஏர்பேக்குகள் (Zeta மற்றும் Alpha வகைகள் மட்டும்), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உடன் ESP, EBD உடன் ABS, பிரேக் அசிஸ்ட் மற்றும் ISOFIX ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மாருதி ஃபிரான்க்ஸ் போட்டியாளர்கள்
க்ராஸ்ஓவர் ஸ்டைலை பெற்றுள்ள மாருதி ஃபிரான்க்ஸ காருக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை என்றால், விலை அமைவதனை பொருத்து, மாருதி பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட், ரெனோ கிகர், சிட்ரோன் C3, டாடா பஞ்ச், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா XUV300 மற்றும் கியா சோனெட் ஆகியவற்றை எதிர்கொள்ளும்.
வரும் வாரத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற மாருதி சுசூகி பிரான்க்ஸ் காரின் விலை ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சத்தில் அமையலாம்.
மாருதி Fronx காரின் என்ஜின் விபரம் என்ன ?
மாருதி ஃபிரான்க்ஸ் காரில் 89bhp பவரை 6,000rpm மற்றும் 113Nm டார்க் வழங்கும் 1.2 லிட்டர் என்ஜின், டாப் வேரியண்டில் 1.0-லிட்டர் டர்போ என்ஜின் 99bhp பவர் 5,500rpm, 147.6Nm டார்க் வழங்கும்.
மாருதி ஃபிரான்க்ஸ் கியர்பாக்ஸ் ஆப்ஷன் என்ன ?
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ், அடுத்து 1.0 லிட்டர் டர்போ வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகும்.
மாருதி fronx மைலேஜ் எவ்வளவு ?
1.2-லிட்டர் பெட்ரோல் MT - 21.79 kmpl AMT - 22.89 kmpl
1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் MT - 21.5 kmpl மற்றும் AT 20.01 kmpl