ஆகஸ்ட் 5.., மாருதி சுசூகி எஸ்-கிராஸ் பிஎஸ்6 விற்பனைக்கு அறிமுகம்

பிஎஸ்-6 பெட்ரோல் இன்ஜின் பெற்ற புதிய மாருதி சுசூகி எஸ்-கிராஸ் காரினை ஆகஸ்ட் 5 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. முன்பாக இந்த காரில் 1.3 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

பிஎஸ்4 மாடலாக விற்பனை செய்யப்பட்ட எஸ்-கிராஸ் காரில் இடம்பெற்றிருந்த பிரசத்தி பெற்ற இந்தியாவின் தேசிய இன்ஜின் என அழைக்கப்படுகின்ற 1.3 லிட்டர் ஃபியட் இன்ஜின் விடை பெற்றதை தொடர்ந்து, தற்போது 1.5 லிட்டர் பிஎஸ்6 இன்ஜின் முன்பாக விற்பனை செய்யப்படுகின்ற சியாஸ் காரில் இடம்பெற்றிருக்கின்றது.

105 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டடுள்ளது.

புதிய எஸ்-கிராஸ் காரின் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. மற்றபடி இன்டிரியரிலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் தற்போது உள்ள வசதிகளே தொடரும். முதன்முறையாக பிஎஸ்6 எஸ்-கிராஸ் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.

புதிய மாருதி எஸ்-கிராஸ் காரின் விலை ரூ.8.30 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் அமையலாம்.