ரூ.9.39 லட்சத்தில் மாருதி சியாஸ் S விற்பனைக்கு வெளியானது

0

ரூ.9.39 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஸ்போர்ட்டிவ் அம்சங்களை பெற்ற மாருதி சியாஸ் S காரின் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.

Maruti Ciaz S front

Google News

மாருதி சியாஸ் S

சிட்டி, வெர்னா போன்ற சி பிரிவு செடான் ரக மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ள சியாஸ் காரில் கிடைக்கின்ற ஆல்பா வேரியன்ட் அடிப்படையில் ரூ.11,000 வரை கூடுதலாக விலையில் அமைந்துள்ளது.

Maruti Ciaz S interior

முந்தைய சியாஸ் ஆர்எஸ் மாடலை போல சில மாற்றங்களை பெற்றுள்ள இந்த மாடலில் அகலமான ஸ்பாய்லர், பக்கவாட்டில் ஸ்கிட் ஆகியவற்றுடன் இன்டிரியரில் கருப்பு வண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவற்றை பெற்றுள்ளதாக வந்துள்ளது.

89 bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள SHVS மினி ஹைபிரிட் சிஸ்டம் ஸ்டார்ட்டர் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

91 bhp பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டடுள்ளது.

Maruti Ciaz S rear

மாருதி சுஸூகி சியாஸ் S விலை பட்டியல்

மாருதி சியாஸ் S பெட்ரோல் – ரூ. 9.39 லட்சம்

மாருதி சியாஸ் எஸ் டீசல் – ரூ. 11.55 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

கடந்த 2014 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சியாஸ் சராசரியாக 5500 கார்களை விற்பனை செய்ப்படுகின்ற நிலையில் சி ரக செக்மென்ட் பிரிவில் 43 சதவீத பங்களிப்பினை பெற்றுள்ளது. 1.70 லட்சம் கார்களை இந்தியளவில் சியாஸ் கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Maruti Ciaz S rear three quarters right side