Automobile Tamilan

இந்தியா வரவிருக்கும் 2023 ஹூண்டாய் i20 கார் அறிமுகமானது

ஐரோப்பா சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஹூண்டாய் i20 கார் மாடலில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றதாக அதிநவீன ADAS வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த வருடத்தின் துவக்கத்தில் விற்பனைக்கு வரக்கூடும்.

தற்பொழுது விற்பனையில் உள்ள மூன்றாவது தலைமுறை மாடலின் அடிப்படையில் சில குறிப்பிடதக்க ஸ்டைலிங் மாற்றங்கள் மட்டும் பெற்று இன்டிரியரில் எந்த மாற்றங்களும் பெரிதாக இல்லை.

2023 Hyundai i20 Facelift

மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் அம்சத்துடன் அகலமான பம்பர் மாற்றியமைக்கப்பட்ட கிரில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஏர்டேம் கொண்டதாக அமைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட பானெட் கொடுக்கப்பட்டு 17 அங்குல அலாய் வீல் புதிய டிசைன் கொண்டுள்ளது.

i20 காரின் இன்டிரியர் வசதிகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், உதவி மற்றும் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும் உதவியைத் தொடர்ந்து லேன் உடன் வரும் ADAS அம்சம் கொண்டுள்ளது. 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் முன்பை விட சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது

1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஏழு வேக DCT தானியங்கி அல்லது ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ உடன் கிடைக்கும். இந்திய சந்தையை பொறுத்தவரை i20 காரில் 1.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் i20 ஃபேஸ்லிஃப்ட், மாருதி சுசூகி பலேனோ, டாடா அல்ட்ராஸ் மற்றும் டொயோட்டா கிளான்ஸா போன்றவற்றுக்கு போட்டியாக அமைந்திருக்கும்.

விரைவில், ஹூண்டாய் எக்ஸடர் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

Exit mobile version