ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் குறைந்த விலை எஸ்யூவி மாடலாக வரவிருக்கும் ஹூண்டாய் எக்ஸடர் காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ₹ 11,000 வசூலிக்கப்படுகின்றது.

1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி என  இரண்டிலும் எக்ஸ்டெர் விற்பனைக்கு 9 விதமான நிறங்களை கொண்டதாக வரவுள்ளது.

Hyundai Exter SUV

எக்ஸ்டர் எஸ்யூவி காரில் 81 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வரவுள்ளது.

EX, S, SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. வெளிப்புற தோற்ற அமைப்பில் இரு பிரிவுகளை கொண்ட எல்இடி புரொஜெக்டர் விளக்குகள் ஹெட்லைட், H- வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் கொண்டிருக்கின்றது.

15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல் பெற்ற காரில் குறைந்த வேரியண்டுகளில் ஸ்டீல் வீல் கொண்டுள்ளது. இது ரூஃப் ரெயில், பாடி கிளாடிங், எல்இடி டெயில் லேம்ப் மற்றும் சன்ரூஃப்  போன்றவற்றை பெற்றுள்ளது.

காஸ்மிக் ப்ளூ மற்றும் ரேஞ்சர் காக்கி ஆகிய இரண்டு புதிய நிறங்களுடன், டாம்பாய் காக்கி, டைட்டன் கிரே, ரெட் மற்றும் ஸ்டேரி நைட்  ஆறு ஒற்றை நிறங்கள் மற்றும் மூன்று டூயல்-டோன் வெளிப்புற வண்ணங்களில் கருப்பு நிறத்துடன் கூடிய டாம்பாய் காக்கி, காஸ்மிக் ப்ளூ, வெள்ளை ஆகியவை உள்ளது.

ஹூண்டாய் எக்ஸடர் எஸ்யூவி காரின் விலையை ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் அறிவிக்கும். இந்திய சந்தையில் பிரபலமான டாடா பஞ்ச், சிட்ரோன் C3, ரெனால்ட் கிகர் மற்றும் நிசான் மேக்னைட் உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.