Categories: Car News

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் டீசர் வெளியானது

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவிருக்கும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டீசர் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ்6 நடைமுறைக்கு வரும்போது டீசல் என்ஜின் பெற்ற டஸ்ட்டர் கார் விற்பனை நிறுத்தப்பட உள்ளது.

8458d new 2019 renault duster teaser

சமீபத்தில் இந்தியாவிலிருந்து சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ ட்ரைபர் எம்பிவி ரக காரை தொடர்ந்து அடுத்த மாடலாக டஸ்ட்டரை ரெனால்ட் இந்தியா வெளியிட உள்ளது. மிக சிறப்பான வரவேற்பினை பெற்றிருந்த டஸ்ட்டர் அதிகப்படியான போட்டியாளகள்களை தொடர்ந்து  விற்பனை சரிவினை சந்தித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள டீசரின் மூலம் முன்பக்க கிரில் மற்றும் புராஜெக்டர் முகப்பு விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக முற்றிலும் காட்சிப்படுத்தப்பட்ட சோதனை ஓட்ட மாடலுக்கு இணையான தோற்றத்தை டஸ்ட்டர் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த காரில் குறிப்பாக கவனிக்கதக்க அம்சங்களாக எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்டர் ஹெட்லைட், மிக நேர்த்தியான மாற்றியமைக்கப்பட்ட முன்புற கிரில், முன் மற்றும் பின்புற பம்பர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக, புதிய வடிவத்தைப் பெற்ற டிசைன் அலாய் வீல், சன் ரூஃப் அம்சங்களை கொண்டிருப்பதுடன் வரவுள்ளது. இன்டிரியரில் குறிப்பாக மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றிருக்கும்.

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் முதற்கட்டமாக விற்பனைக்கு வெளியாக உள்ளது. பிஎஸ் 6 நடைமுறைக்கு வரும்போது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளதாக ரெனோ இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அடுத்த சில வாரங்களுக்குள், ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியாகலாம். அதனை தொடர்ந்து, இந்நிறுவனம் ரெனோ ட்ரைபர் எம்பிவி ரக காரினை விற்பனைக்கு வெளியிடக்கூடும்.

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

1 day ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

1 day ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

1 day ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

1 day ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

2 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

2 days ago