ரூ.10.10 லட்சத்தில் டாடா நெக்ஸான் XZ+ (S) விற்பனைக்கு அறிமுகமானது

70245 new tata nexon suv bs6 1

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் எஸ்யூவி காரில் கூடுதலாக சன் ரூஃப் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக XZ+ (S) பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க துவ்கியுள்ளது.

முன்பாகவே நெக்ஸான் காரில் விற்பனை செய்யப்படுகின்ற  XE, XM, XZ, XZ+, XZ+ (O), XMA, XZA+ மற்றும் XZA+ (O) என 8 விதமான வேரியண்டுகளில் கூடுதலாக வந்துள்ள புதிய வேரியண்ட் XZ+ வேரியண்டை விட கூடுதலாக ரூ.60,000 விலையில் அமைந்துள்ளது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இப்போது 120 ஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஏஎம்டி கியர்பாக்ஸை பெறுகின்றது.

அடுத்ததாக பிஎஸ்6 டீசல் 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போ டீசல் 3,750 ஆர்.பி.எம் சுழற்சியில் 110 ஹெச்பி மற்றும் 1,500-2,750 ஆர்.பி.எம்-ல் 260 என்எம் டார்க் வழங்கும். இந்த என்ஜினும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோ கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கும்.

புதிய XZ+ (S) வேரியண்டில் சன் ரூஃப், ஆட்டோ ஹெட்லேம்ப், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்கும் iRA ஆப், மல்டி டிரைவ் மோட்ஸ், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகளை பெறுகின்றது.

2020 டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப விலை ரூ.6.95 லட்சம் (பெட்ரோல்) மற்றும் டீசல் மாடலின் ஆரம்ப விலை ரூ. 8.45 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

பிஎஸ்6 பெட்ரோல் டீசல்
Tata Nexon XE ரூ. 6.95 லட்சம் ரூ. 8.45 லட்சம்
Tata Nexon XM ரூ. 7.70 லட்சம் ரூ. 9.20 லட்சம்
Tata Nexon XMA ரூ. 8.30 லட்சம் ரூ. 9.80 லட்சம்
Tata Nexon XZ ரூ. 8.70 லட்சம் ரூ. 10.20 லட்சம்
Tata Nexon XZ+ ரூ. 9.70 லட்சம் ரூ. 11.20 லட்சம்
Tata Nexon XZ+ (S) ரூ. 10.10 லட்சம் ரூ. 11.60 லட்சம்
Tata Nexon XZA+ ரூ. 10.30 லட்சம் ரூ. 11.80 லட்சம்
Tata Nexon XZ+ (O) ரூ. 10.60 லட்சம் ரூ. 12.10 லட்சம்
Tata Nexon XZA+ (O) ரூ. 11.20 லட்சம் ரூ. 12.70 லட்சம்

 

Exit mobile version